திருச்சி : பெண்ணை தாக்கிய ரவுடி கைது

X
திருச்சி உறையூர் கீழகல்நாயக்கன் தெருவை சேர்ந்தவர் அமுதா (வயது 45). இவர் தனது உறவினரான அதே பகுதியை சேர்ந்த ரவுடி அப்பாஸ் என்கிற பாலகுமார் (28) என்பவரிடம் தனது மகனின் இருசக் கர வாகனத்தை கொடுத்தார். ஆனால் அந்த வாகனத்தை அப்பாஸ் மதுபோதையில் தொலைத்து விட்டதாக கூறப்படுகிறது. இதில் ஏற்பட்ட பிரச்சினையை தொடர்ந்து அமுதாவின் வீட்டிற்கு சென்ற அப்பாஸ் தகாத வார்த்தைகளால் அமுதா மற்றும் அவரது மகனை திட்டி மரக்கட்டையால் தாக்கி, கொலை மிரட்டல் விடுத்துள்ளார். இதில் காயம டைந்த அமுதா திருச்சி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றார். இதுகுறித்த புகாரின்பேரில் உறையூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து அப்பாஸ் என்கிற பாலகுமாரை கைது செய்த னர்
Next Story

