அங்கன்வாடி கட்டிடம் அமைக்க வேண்டும் சட்டசபையில் சேகர் எம்.எல்.ஏ. கோரிக்கை

X
Paramathi Velur King 24x7 |19 March 2025 8:18 PM ISTபரமத்திவேலூர் தொகுதியில் அங்கன்வாடி கட்டிடம் அமைக்க வேண்டும் சட்டசபையில் சேகர் எம்.எல்.ஏ. கோரிக்கை
பரமத்திவேலூர், மார்ச்.19- தமிழக சட்டசபையின் பட்ஜெட் மீதான விவாதம் நேற்று நடைபெற்றது. இதில் நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் சட்ட மன்ற உறுப்பினர் 'சேகர் பேசினார். அப் போது அவர் பேசுகையில், ஊராட்சி பகு திகளில் ஊரக வளர்ச்சி திட்டத்தின் மூலம் அதிக அங்கன்வாடி கட்டிடம் கட்டப்பட்டு இருக்கின்றன. ஆனால் நாமக்கல் மாவட்டம் பரமத்திவே லூர் தாலுகாவில் உள்ள வெங்கரை, பாண்டமங்கலம், பொத்தனூர், வேலூர் மற்றும் பரமத்தி உள்ளிட்ட 5 பேரூராட்சி பகுதிக்கு நிதி சரியாக ஒதுக்கப்படவில்லை. குறிப்பாக பொத்தனூர் பேரூராட்சி மற்றும் பாண்டமங்க லம் பேரூராட்சிக்கு அங்கன்வாடி கட்டிடம் அமைக்கப்பட வேண்டும் எனவும், சட்டமன்ற உறுப்பினர் மேம்பாட்டு நிதியில் போதிய நிதியில்லாத காரணத்தினால் அரசு நிதி உதவி தருமாறும் வலியுறுத்தி பேசினார். இதற்கு பதிலளித்த சமூக நலத்துறை அமைச்சர் கீதா ஜீவன் ஊரகப் பகுதி களில் மகாத்மா காந்தி ஊரக வளர்ச்சி திட்டத்தின் மூலம் செய்யப்படுகின்றது. ஆனால் பேரூராட்சி, நகராட்சி சட்ட மன்ற உறுப்பினர் நிதி மற்றும் நாடாளுமன்ற நிதி மூலம் செயல்படுகின்றது. சட்டமன்ற உறுப்பினர் குறிப்பிட்டுள்ள பேரூராட்சி பகுதிகளில் கட்டிடம் கட்டுவதற்கு என்ன வழிவகை என்பதை நகர்புற வளர்ச்சி துறையோடு இணைத்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என சட்ட மன்ற உறுப்பினர் சேகரிடம் தெரிவித்தார்.
Next Story
