மாவட்டம் குன்னூர் அருகே வட மாநில தொழிலாளியை படுகொலை செய்த குற்றவாளியை ஒடிசா சென்று தட்டி தூக்கிய குன்னூர் போலீசார்..

கைது செய்து குற்றவாளியை ரயில் மூலம் குன்னூர் கொணடு வருகின்றனர்........
நீலகிரி மாவட்டம் குன்னூர் மேட்டுப்பாளையம் தேசிய நெடுஞ்சாலை மரப்பாலம் பகுதியில் தனியார் தேயிலைத் தோட்டத்தில் பணி புரிய ஒடிசா மாநிலத்தில் இருந்து வந்து நரேந்திரன் (42) வீரேந்திரன் ஆகியோர் இருவர் கடந்த ஒரு வாரமாக பணியாற்றி வந்த நிலையில் அவர்களுக்கு தங்குவதற்காக மரப்பாலம் பகுதியில் தோட்ட நிர்வாகம் சார்பாக தங்குவதற்கு வீடு ஒதுக்கப் பட்டிருந்தது இந்நிலையில் பதினெட்டாம் தேதி நரேந்திரன் பணிக்கு வராததால் மேலாளர் வீட்டுக்கு வந்து பார்த்தபோது நரேந்திரன் கழுத்து அறுக்கப்பட்டு ரத்த வெள்ளத்தில் பிணமாக கிடந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்த மேலாளர் உடனடியாக காவல்துறைக்கு தகவல் கொடுத்தார். இதனை தொடர்ந்து குன்னூர் டிஎஸ்பி ரவி தலைமையில் இன்ஸ்பெக்டர் சதீஷ் மற்றும் போலீசார் விரைந்து வந்து நரேந்திரனின் உடலையும்,ரத்த கரை படிந்துள்ள அரிவாள் ஆகியவற்றை கைப்பற்றி விசாரணை மேற்கொண்டனர். மேலும் இது தொடர்பாக மாவட்ட எஸ் பி என் எஸ் நிஷா சம்பவ இடத்திற்கு வந்து ஆய்வு மேற்கொண்டு அதிகாரிகளுக்கு அறிவுரை வழங்கி சென்றார். இந்த கொலை தொடர்பாக மோப்ப நாய் வரவழைக்கப்பட்டது. இந்த மோப்பநாய் மரப்பாலத்தில் இருந்து சுமார் இரண்டு கிலோமீட்டர் தூரம் மலைப்பாதையில் வேகமாக சென்று நின்றுவிட்டது. முன்னதாக எதிரே வரும் வாகனங்கள் ஆங்காங்கே நிறுத்தப்பட்டு மோப்ப நாய்க்கு வாகன ஓட்டிகள் வழி விட்டனர். இச்சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்கு பதிவு செய்து நரேந்திரனின் உடலை பிரேத பரிசோதனைக்காக குன்னூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்நிலையில் வீரேந்திரனை பிடிக்க குன்னூர் டிஎஸ்பி ரவி மேற்பார்வையில் நான்கு தனிப்படைகள் அமைக்கப்பட்டு கோவை, திருப்பூர், ஈரோடு,சென்னை உள்ளிட்ட பகுதிகளில் விசாரணை மேற்கொண்டு வந்தனர். மேலும் அவனது செல்போன் செயல்பாடுகள் குறித்தும் கண்காணிக்கப் பட்டதில் கோவை ரயில் நிலையத்தில் சுவிட்ச் ஆப் செய்தது தெரிய வந்தது. இது மட்டுமல்லாமல் ஒடிசா மாநிலத்தில் உள்ள வீரேந்திரனின் உறவினர்களிடமும் போலீசார் தொலை பேசி மூலம் விசாரணை மேற்கொண்டனர்.இந்நிலையில் குன்னூர் சப் இன்ஸ்பெக்டர் குணா தலைமையில் காவலர்கள் ஜாகிர் உசேன்,வினித் பாலாஜி ஆகியோர் அடங்கிய தனிப்படையினர் கடந்த பதினெட்டாம் தேதி ரயில் மூலம் ஒடிசா சென்றனர்.அங்குள்ள போலீசார் உதவியுடன் வீரேந்திரனை நேற்று மாலை 6:00 மணிக்கு குன்னூர் போலீசார் கைது செய்தனர். இதனைத் தொடர்ந்து குற்றவாளியாக கருதப்படும் வீரேந்திரன் இன்று இரவுக்குள் குன்னூர் கொண்டுவரப்பட்டு அதன் பின்னர் நடைபெறும் விசாரணையில் தான் கொலைக்கான காரணம் தெரிய வரும் என போலீசார் தெரிவித்தனர். இந்த கொலைச் சம்பவம் தொடர்பான கைது செய்யப்பட்ட குற்றவாளியை போலீசார் ஒடிசா சென்று இரண்டு நாளில் கைது செய்துள்ளதுதமிழக காவல்துறையின் செயல்பாட்டை விளக்குகிறது.
Next Story