உதகையில் சித்திரைத் தேர்த்திருவிழாவின் நான்காம் நாள் இன்று ஸ்ரீ பராசக்தி அலங்காரத்தில் காட்சியளித்தார்

திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம்
நீலகிரி மாவட்டம் உதகையில் மையப் பகுதியில் அமைந்திருக்கும் மாரியம்மன் காளியம்மன் கோவில் சித்திரை தேர் திருவிழா வெகு விமர்சையாக நடைபெற்று வருகிறது தொடர்ந்து உபயதாரர்கள் ஒவ்வொரு நாளும் தங்களுடைய கலாச்சாரத்தின் படி அம்மன் அலங்காரம் மற்றும் அம்மனின் திருவீதி உள்ளார் நடத்துவது வழக்கமாக உள்ளது இந்நிலையில் இன்று லக்கே கவுடர் ட்ரஸ்ட் சார்பில் கேடயம் வாகனத்தில் ஸ்ரீ பராசக்தி அலங்காரத்தில் அம்மனின் திருவீதி உலா நடைபெற்றது இதில் காலை முதலே அம்மனுக்கு சிறப்பு அலங்காரங்கள் மற்றும் அபிஷேகங்கள் நடைபெற்றது பிற்பகல் அன்னதானம் மற்றும் மாவிளக்கு பூஜை நடைபெற்றது தொடர்ந்து மாலை 4 மணி அளவில் அம்மனுக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்று அம்மனின் திருவீதி உலா முக்கிய விதி வழியாக சன்னிதானத்தை வந்தடைந்தது இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் மேற்கொண்டனர்
Next Story