திண்டிவனத்தில் திமுக இளைஞரணி சார்பில் இறகுப்பந்தாட்ட போட்டி நடைபெற்றது

X
திண்டிவனத்தில், நகர தி.மு.க., இளைஞரணி சார்பில், துணை முதல்வர் உதயநிதி பிறந்த நாளை முன்னிட்டு, மரக்காணம் சாலையில் உள்ள கிளப்பில் இறகு பந்து போட்டி நடந்தது. போட்டியை திண்டிவனம் நகர மன்ற தலைவர் நிர்மலா ரவிச்சந்திரன் துவக்கி வைத்தார்.போட்டியில் விழுப்புரம் மாவட்டத்தைச் சேர்ந்த 20க்கு மேற்பட்ட அணிகள் பங்கேற்றன. இதில் முதல் 3 இடங்களைப் பிடித்த அணிகளுக்கு பரிசளிப்பு விழா நடந்தது.நகர இளைஞரணி அமைப்பாளர் சதீஷ், துணை அமைப்பாளர்கள் ராஜசேகர், ஸ்டீபன்ராஜ், இலியாஸ், சஞ்சய்சசி முன்னிலை வகித்தனர்.விழுப்புரம் வடக்கு மாவட்ட பொறுப்பாளர் மஸ்தான் பரிசு மற்றும் கோப்பைகளை வழங்கினார்.முன்னாள் எம்.எல்.ஏ.,க்கள் மாசிலமாணி, சேதுநாதன், மாவட்ட பொருளாளர் ரமணன், நகர செயலாளர் கண்ணன், மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர்கள் ரமேஷ், பாபு, வழக்கறிஞர் அசோகன், மரக்காணம் ஒன்றிய பொறியாளர் அணி அமைப்பாளர் ராஜா உட்பட பலர் பங்கேற்றனர்.
Next Story

