முதலமைச்சர் பிறந்த நாளை முன்னிட்டு பொது மக்களுக்கு நலத்திட்ட உதவிகள்
வல்லூர் தேசிய அனல் மின் நிலையத்தில் தமிழ்நாடு மின் கழக தொழிலாளர் முன்னேற்ற கழகம் சார்பில் தங்க கொடியேற்றி வைத்து முதல்வர் மு க ஸ்டாலின் பிறந்த நாளை ஒட்டி திருவள்ளூர் கிழக்கு மாவட்ட பொறுப்பாளர் எம்எஸ்கே ரமேஷ் ராஜ் பொது மக்களுக்கு இனிப்பு புடவை உள்ளிட்ட நலத்திட்ட உதவிகளை வழங்கினார் இதில் தொமுச மாநில பொதுச் செயலாளர் மணிபாலன் நிகழ்ச்சி ஏற்பாட்டாளர் சிம்சன் கடந்த 12 ஆண்டு காலமாக பணி புரியும் 2000 ஒப்பந்த பணியாளர்களை பணி நிரந்தரம் செய்ய மத்திய மாநில அரசுகளிடம் வலியுறுத்த வேண்டும் என கோரிக்கை மனுவை வழங்கினர் அத்திபட்டு வடசென்னை அனல் மின் நிலையத்தில் முதல்வர் மு க ஸ்டாலின் பிறந்த நாளை ஒட்டி தொமுச மாநில பொதுச் செயலாளரிடம் மணிபாலன் கிழக்கு மாவட்ட பொறுப்பாளர் எம்எஸ்கே ரமேஷ் ராஜ் இனிப்பு பிரியாணி வழங்கியும் புடவை உள்ளிட்ட நலத்திட்ட உதவிகளையும் வழங்கினார்.
Next Story







