மதிய உணவு சாப்பிட்ட மாணவர்களுக்கு வாந்தி மயக்கம்.

மதிய உணவு சாப்பிட்ட மாணவர்களுக்கு வாந்தி மயக்கம்.
X
திருவாரூர் அடுத்த தென்னவராயநல்லூர் பகுதியில் மதிய உணவு சாப்பிட்ட பள்ளி மாணவர்கள் 40க்கும் மேற்பட்டோருக்கு வாந்தி மயக்கம் ஏற்பட்டதால் பெற்றோர்கள் திருவாரூர் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தன என் காரணமாக பகுதியில் பரபரப்பு நிலவியது.
திருவாரூர் அருகே அரசு ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் மதிய உணவு சாப்பிட்ட 40-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகளுக்கு வாந்தி மயக்கம் சிகிச்சைக்காக திருவாரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதி. திருவாரூர் மாவட்டம் தென்னவராயநல்லூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் 75க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் பயின்று வருகின்றனர். இந்நிலையில் இன்று பள்ளியில் பரிமாறப்பட்ட மதிய உணவு சாப்பிட்ட 60-க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகளில் பலருக்கு வாந்தி மயக்கம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இருப்பினும் பள்ளி நேரம் முடிவடைந்து அவர்களை வீட்டிற்கு பள்ளி நிர்வாகம் அனுப்பியதாக கூறப்படுகிறது. வீட்டிற்கு சென்ற மாணவ மாணவிகள் இச்சம்பவம் குறித்து பெற்றோருக்கு தெரிவித்ததன் பேரில் அதிர்ச்சி அடைந்த பெற்றோர் உடனடியாக அவர்களை அருகிலுள்ள திருவாரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். 40-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் சிகிச்சை பெற்று வரும் நிலையில் அவர்களை மாவட்ட ஆட்சியர் மோகனச்சந்திரன் நேரில் பார்வையிட்டு நலன் விசாரித்தார். தொடர்ந்து மதிய உணவு சாப்பிட்ட அனைத்து மாணவர்களையும் பரிசோதனை மேற்கொள்ளவும் அவர் உத்தரவிட்டார். தற்போது சிகிச்சை அனுமதிக்கப்பட்ட மாணவர்களின் உடல்நிலை சீராக உள்ளதாக மருத்துவமனை நிர்வாகம் தரப்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Next Story