தொடக்கப்பள்ளி மாணவர்களின் கற்றல் திறனை ஆய்வு செய்த ஆட்சியர்.

X
திருவாரூர் மாவட்டம், குடவாசல் வட்டத்திற்குட்பட்ட பகுதியில் தமிழ்நாடு முதலமைச்சரின் உங்களைத் தேடி, உங்கள் ஊரில் திட்டத்தின் கீழ் திருவாரூர் மாவட்ட ஆட்சித்தலைவர் மோகனச்சந்திரன் முகாமிட்டு இன்று கள ஆய்வு மேற்கொண்டார். மக்களை நாடி, மக்கள் குறைகளை கேட்டு உடனுக்குடன் தீர்வு காண தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களால் அறிவிக்கப்பட்ட “உங்களைத்தேடி, உங்கள் ஊரில்” திட்டம் ஒவ்வொரு மாதமும், ஒரு வருவாய் வட்டத்தில் நடைபெற வேண்டும் என்பதன் அடிப்படையில் மாவட்ட ஆட்சியர் அவர்கள் தங்கி கள ஆய்வில் ஈடுபடுவதுடன், அனைத்து அரசு துறை உயர் அலுவலர்களும் வருவாய் வட்டத்தில் கள ஆய்வில் ஈடுபட்டு, அரசு அலுவலகங்களை ஆய்வு செய்து மக்களின் குறைகளை கேட்டறிந்து, அரசின் அனைத்து நலத்திட்டங்களும், சேவைகளும் தங்குதடையின்றி தகுதியான மக்களைச் சென்று அடைவதை உறுதி செய்யும் பொருட்டு ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர். இன்றைய தினம் (19.03.2025), திருவாரூர் மாவட்டத்தில் 2025 மார்ச் மாதத்திற்கான முகாம் குடவாசல் வட்டத்திற்குட்பட்ட பகுதியில் காலை 9.00 மணி முதல் நடைபெற்று வருகிறது. அதனடிப்படையில், மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள், குடவாசல் வட்டத்திற்குட்பட்ட பகுதியில் முகாமிட்டு, தமிழ்நாடு முதலமைச்சரின் உங்களைத் தேடி, உங்கள் ஊரில் திட்டத்தின் கீழ், குடவாசல் வட்டத்திற்குட்பட்ட சிமிழி ஊராட்சியில் ஸ்ரீ இராமகிருஷ்ணா வித்யாலயா அரசு உதவி பெறும் தொடக்கப் பள்ளியில் ஆய்வு மேற்கொண்டு பள்ளி மாணவ, மாணவிகளிடம் கல்வி தரம் குறித்து அறிய பாடபுத்தகங்களில் சில பாடங்களை வாசித்து காட்ட மாவட்ட ஆட்சித்தலைவர் கூறியதன் அடிப்படையில் மாணவ, மாணவியர்கள் வாசித்து காட்டினார்கள்.
Next Story

