கலைஞர் கனவு இல்லத் திட்டப் பணிகளை ஆய்வு செய்த ஆட்சியர்.

X
தமிழ்நாடு முதலமைச்சர் ஆணைக்கிணங்க உங்களைத் தேடி உங்கள் ஊர் திட்டத்தின் கீழ் மாவட்ட ஆட்சியர்கள் ஒவ்வொரு ஒன்றியங்களிலும் மாதம் ஒருமுறை முகாம் இட்டு ஆய்வுப் பணிகளை மேற்கொண்டு வருகின்றனர் அதன் ஒரு பகுதியாக திருவாரூர் மாவட்டம் குடவாசல் ஒன்றியம் சிமிழி ஊராட்சி தலையாங்காடு கிராமத்தில் கலைஞரின் கனவு இல்லம் திட்டத்தின் கீழ் பயனாளிகளால் கட்டப்பட்டுவரும் குடியிருப்பு வீடுகளையும், ரூ.2.67 இலட்சம் மதிப்பீட்டில் பிரதம மந்திரி குடியிருப்பு வீடு கட்டும் திட்டத்தின் கீழ் கட்டப்பட்டுவரும் வீட்டினையும், ஊரக வீடு சீரமைப்பு திட்டத்தின் கீழ் பயனாளி ஒருவர் வீட்டில் மேற்கொள்ளப்பட்டுவரும் பழுதுநீக்க பணிகளையும் மாவட்ட ஆட்சியர் மோகனச்சந்திரன் நேரில் பார்வையிட்ட ஆய்வு செய்தார்.
Next Story

