உறையூர் கமலவல்லி நாச்சியார் கோவிலில் தெப்ப திருவிழா நேற்று தொடங்கியது.

X
ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலின் உப கோவிலான உறையூர் கமல வல்லி நாச்சியார் கோவிலில் ஆண்டுதோறும் தெப்பத்திருவிழா சிறப் பாக கொண்டாடப்படும். இந்த ஆண்டுக்கான விழா நேற்று தொடங்கி யது. மாலை 5 மணிக்கு தாயார் மூலஸ்தானத்தில் இருந்து புறப்பட்டு மாலை 5.15 மணிக்கு தெப்ப மண்டபம் வந்தடைந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். மாலை 5.30 மணி முதல் 6.30 மணி வரை அலங்கா ரம் அமுது செய்தல் தீர்த்தகோஷ்டி நடைபெற்றது. மாலை 6.45 மணி முதல் 8.15 மணி வரை பொது ஜன சேவை நடைபெற்றது. இரவு 8.30 மணிக்கு தெப்ப மண்டபத்தில் இருந்து புறப்பட்டு, இரவு 8.45 மணிக்கு மூலஸ்தானம் வந்தடைந்தார். விழாவையொட்டி வருகிற 23-ந்தேதி வரை தினமும் மாலை 5 மணிக்கு தாயார் மூலஸ்தானத்தில் இருந்து புறப்பட்டு தெப்ப மண்டபம் வந்தடைந்து பக்தர்களுக்கு அருள் பாலிக்கிறார். விழாவின் முக்கிய நிகழ்ச்சியான தெப்ப உற்சவம் வரு கிற 24-ந்தேதி (திங்கட்கிழமை) நடக்கிறது. அன்று மாலை 5 மணி அளவில் தாயார் மூலஸ்தானத்தில் இருந்து புறப்பட்டு மாலை 5.15 மணிக்கு தெப்ப மண்டபம் வந்தடைகிறார். மாலை 5.30 மணி முதல் மாலை 6.30 மணி வரை அலங்காரம், அமுது செய்து தீர்த்த கோஷ்டி நடைபெறும். இரவு 7 மணிக்கு தெப்ப உற்சவம் நிகழ்ச்சி நடைபெறும். அலங்கரிக்கப்பட்ட தெப்பத்தேரில் தாயார் எழுந்தருளி வலம் வருவார். பின்னர் இரவு 10.15 மணி அளவில் மூலஸ்தானம் சேருகிறார். இதைத் தொடர்ந்து 25-ந்தேதி தீர்த்தவாரி நடைபெறுகிறது. இதில் தாயார் மாலை 4.30 மணிக்கு தீர்த்தவாரி கண்டருளி தெப்ப மண்டபம் சேருகி றார். இரவு 9 மணிக்கு ஆளும் பல்லக்கில் தாயார் புறப்பட்டு வீதி உலா வந்து மண்டபம் சேருகிறார். இரவு 10.15 மணிக்கு மண்டபத்தில் இருந்து மூலஸ்தானம் சென்றடைகிறார்.
Next Story

