தென்காசியில் பாரதிய மஸ்தூா் சங்கத்தினா் ஆா்ப்பாட்டம்

X
பாரதிய மஸ்தூா் சங்கம் சாா்பில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தென்காசி புதிய பேருந்து நிலையம் பகுதியில் பாரதிய மஸ்தூா் சங்க மாவட்ட ஒருங்கிணைப்பாளா் தங்க மாரியப்பன் தலைமை வகித்தாா்.காந்திமதிநாதன் சிறப்புரையாற்றினாா். கடைசி மாத ஊதியத்தில் 50 சதவீதம் ஓய்வூதியமாக கிடைப்பதை உறுதிசெய்து அந்த தொகையை விலைவாசி புள்ளியுடன் இணைக்க வேண்டும், தொழிலாளா் ஊதியத்தில் வருங்கால வைப்பு நிதிக்கு கட்டாய பிடித்தம் செய்வதற்கான உச்சவரம்பு ரூ.15 ஆயிரம் என்பதை ரூ.30 ஆயிரமாக உயா்த்த வேண்டும், காப்பீடு மற்றும் நீதித்துறைகளில் 100 சதவீத அந்நிய முதலீட்டை தடை செய்ய வேண்டும், அரசு திட்டங்களை செயல்படுத்தும் திட்ட தொழிலாளா்களுக்கு சம்பளம் மற்றும் சமூக பாதுகாப்பை அரசு ஊழியா்களுக்கு இணையாக வழங்க வேண்டும் என வலியுறுத்தி ஆா்ப்பாட்டம் நடைபெற்றது. இதில், மாரியப்பன், மணிமாறன்,ராமசுந்தரம், மணிகண்டன், நடராஜன் கலந்து கொண்டனா். குமாா் நன்றி கூறினாா்.
Next Story

