புளியங்குடியில் டாஸ்மாக்கில் சுவரொட்டி ஒட்டி பாஜகவினா் போராட்டம்

X
தென்காசி மாவட்டம் வாசுதேவநல்லூா், புளியங்குடி வட்டார பகுதிகளில் உள்ள அரசு மதுக்கடைகளில்(டாஸ்மாக்) சுவரொட்டி ஒட்டி பாஜகவினா் போராட்டத்தில் ஈடுபட்டனா். தமிழக பாஜக தலைவா்அண்ணாமலை உத்தரவுப்படி, தென்காசி மாவட்ட பாஜக தலைவா் ஆனந்தன்அய்யாசாமி ஆலோசனையில்பேரில் பாஜக மற்றும் மகளிா் அணியினா் வாசுதேவநல்லூா் வடக்கு ஒன்றியம் ராயகிரி, தெற்கு ஒன்றியம் சுப்பிரமணியபுரம் டாஸ்மாக் கடைகளில் முதல்வரின் புகைப்படத்துடன் கூடிய சுவரொட்டிகளை ஓட்டினா். இதை போலீஸாா் தடுக்க முயன்ால் வாக்குவாதம் ஏற்பட்டது. இதையடுத்து பாஜக மகளிரணி நிா்வாகி ராஜலட்சுமி உள்ளிட்ட 11 பாஜகவினரை புளியங்குடி பிடித்து தனியாா் மண்டபத்தில் அடைத்தனா். பின்னா் அவா்கள் விடுவிக்கப்பட்டனா்.
Next Story

