பூட்டிய வீட்டில் கொத்தனார் மர்ம சாவு

பூட்டிய வீட்டில் கொத்தனார் மர்ம சாவு
X
தலக்குளம்
குமரி மாவட்டம் தலக்குளம் தும்பவிளை பகுதியை சேர்ந்தவர் சதீஷ் மகன்  ரதீஷ் (34) கட்டிடத் தொழில் செய்து வந்தார். இன்னும் திருமணம் ஆகவில்லை. இவருக்கு மது குடிக்கும் பழக்கம் இருந்து வந்ததாக கூறப்படுகிறது. நேற்று முன்தினம் ரதீஷ் வேலைக்கு செல்லவில்லை.        இதனால் வீட்டில் இருந்த ரதீஷிற்கு அவரது தாயார் மதிய உணவு கொடுத்துள்ளார். பின்னர் அவர் படுக்கையறைக்கு சென்று விட்டார். இதனிடைய நேற்று காலை அவரது தாயார் ரதீஷிற்கு டிபன் கொடுக்க சென்றார். படுக்கையறை பூட்டி கிடந்ததால் கதவை தட்டி பார்த்தார். ஆனால் கதவு திறக்கவில்லை. இதனால் சந்தேகம் அடைந்த அவர் சத்தம் போடவே அக்கம் பக்கத்தினர் வந்து கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தனர். அப்போது ரதீஷ் இறந்த நிலையில் பிணமாக கிடந்தார். அவரது வலது கால், முதுகு பகுதிகளில் எறும்பு கடித்த காயம் இருந்தது.        இது குறித்து இரணியல் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடம் வந்த போலீசார் ரதீஷ் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ரதீஷ் எப்படி இறந்தார் என்பது குறித்து உடனடியாக தெரியவில்லை.        பிரேத பரிசோதனை அறிக்கைக்கு பிறகு தான் ரதீஷ் எப்படி இறந்தார் என்பது குறித்து தெரிய வரும் என போலீசார் தெரிவித்தனர்.
Next Story