திருக்குவளை தாலுகாவில் உள்ள வளங்களை
நாகப்பட்டினம் மாவட்டம் கீழ்வேளூரில் செயல்பட்டு வரும், தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழக வேளாண்மைக் கல்லூரியை சேர்ந்த 4-ம் ஆண்டு மாணவர்கள், ஊரக வேளாண் பணி அனுபவ திட்டத்தின் ஒரு பகுதியாக, திருக்குவளை தாலுகாவில் உள்ள ஒருங்கிணைந்த வேளாண்மை விரிவாக்க மையத்தில், மக்கள் பங்கேற்பு முறையில் ஊரக வளங்களை கண்டறிதல் எனும் முறையைக் கொண்டு, திருக்குவளை கிராமத்தின் வளங்களை கண்டறிந்தனர். இப்பணியை, சுய உதவிக்குழுவின் உதவியோடும், பொதுமக்களின் உதவியோடும், கிராமத்தின் வளங்களையும், தேவைகளையும் வண்ணப்பொடிகள் மூலம் வரைபடமாக வரைந்தனர். நிகழ்ச்சியில், வேளாண் காடு வளர்ப்பு திட்டத்தின்கீழ், மரக்கன்றுகளை மாணவர்கள் விவசாயிகளுக்கு வழங்கினர்.
Next Story



