ஏற்காடு மலைப்பாதையில் சரக்கு வேன் பாறையில் மோதி விபத்து

ஏற்காடு மலைப்பாதையில் சரக்கு வேன் பாறையில் மோதி விபத்து
X
லேசான காயத்துடன் டிரைவர் தப்பினார்
சேலம் மாவட்டம் ஏற்காட்டில் இருந்து நேற்று மாலை சுமார் 6 மணியளவில் சரக்கு வாகனம் ஒன்று சேலத்தை நோக்கி சென்று கொண்டிருந்தது. இந்த வாகனத்தை ஏற்காடு ஒண்டிக்கடை பகுதியைச் சேர்ந்த அகமத் சையது (வயது 65) என்பவர் ஓட்டி வந்தார். சரக்கு வேன் 13-வது கொண்டை ஊசி வளைவு அருகே வந்தபோது டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து மலைப்பாதை ஓரத்தில் இருந்த பாறையில் மோதியது. இதில் அதிர்ஷ்டவசமாக டிரைவர் லேசான காயத்துடன் உயிர் தப்பினார்.
Next Story