பூட்டியிருந்த வீட்டில் பெண் மரணம்.

பூட்டியிருந்த வீட்டில் பெண் மரணம்.
X
மதுரையில் பூட்டியிருந்த வீட்டில் பெண் இறந்து கிடந்த சம்பவம் நடந்துள்ளது.
மதுரை பழைய மாகாளிப்பட்டி ரோட்டில் வசிக்கும் பிரேம்குமார் என்பவர் ராம்நாட்டில் உள்ள தோட்டக்கலை துறையில் உதவியாளராக பணிபுரிந்து வருகிறார். இவரது மனைவி வித்யா( 42) . இவர்களுக்கு 9 வருடங்களுக்கு முன் திருமணமாகியும் குழந்தை இல்லை. மேலும் தாய் மற்றும் தந்தை அடுத்தடுத்த வருடங்களில் இறந்தால் சில மாதங்களாக வித்யா விரக்தியில் இருந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் நேற்று (மார்ச் .19) இரவு வீட்டில் மயக்கமுற்று கிடந்துள்ளார். 108 ஆம்புலன்ஸ் வரவழைக்கப்பட்டு சோதித்ததில் அவர் உயிரிழந்து விட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்து தெற்கு வாசல் போலீசார் விசாரிக்கின்றனர்.
Next Story