முதல்-அமைச்சர் புகைப்படங்களை டாஸ்மாக் கடையில் ஒட்ட முயன்ற

X
டாஸ்மாக்கில் ரூ.1,000 கோடிக்கு மேல்முறைகேடு நடந்ததாக அமலாக்கத்துறை அறிக்கை வெளியிட்டது. இந்த முறைகேட்டை கண்டித்து தமிழகம் முழுவதும் பா.ஜனதா நிர்வாகிகள் சாலை மறியல் உள்பட பல்வேறு போராட்டத்தில் ஈடுபட்டனர். ஒவ்வொரு டாஸ்மாக் கடையிலும் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினின் புகைப்படத்தை ஒட்டி போராட்டம் நடத்தப்படும் என்று பா.ஜனதா மாநில தலைவர் அண்ணாமலை அறிவித்தார். அதன்படி நேற்று சேலத்தில் பா.ஜனதா கட்சியினர் சிலர் சேலம் முள்ளுவாடி கேட் பகுதியில் உள்ள டாஸ்மாக் மதுபான கடையில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் படத்தை ஒட்ட முயன்றனர். அப்போது அவர்களை அங்கிருந்த கடை ஊழியர்கள் தடுத்தனர். பின்னர் இது குறித்து அவர்கள் அஸ்தம்பட்டி போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். அதன்பேரில் போலீசார் சம்பந்தப்பட்ட டாஸ்மாக் கடைக்கு வந்து முதல்-அமைச்சர் படத்தை ஒட்ட முயன்றவர்களிடம் பேச்சு வார்த்தை நடத்தி அவர்களை தடுத்தனர். அப்போது அவர்களுக்கும், போலீசாருக்கும் வாக்கு, வாதம் ஏற்பட்டது. பின்னர் கடை ஊழியர் லோகநாதன் அஸ்தம்பட்டி போலீசில் புகார் கொடுத்தார். அதன்பேரில் அரசு பணி செய்ய விடாமல் தடுத்தல் உள்ளிட்ட 3 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர். தொடர்ந்து பா.ஜனதா மாவட்ட மகளிர் அணி தலைவர் சுமதிஸ்ரீ (வயது 48), மாநில பொதுச்செயலாளர் பூங்கொடி (43), மாவட்ட துணைத்லைவர் புஷ்பா (50), பொருளாளர் விஜயலட்சுமி (45), அஸ்தம்பட்டி மண்டல தலைவர் சந்தோஷ்குமார் (43), முன்னாள் தலைவர் சண்முகசுந்தரம் (43) உள்பட 6 பேரை போலீசார் கைது செய்தனர். இதே போன்று சேலம் மாவட்டம் ஆத்தூர் வளையமாதேவி பகுதியில் உள்ள டாஸ்மாக் மதுபான கடையில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் படத்தை ஒட்ட முயன்ற பா.ஜனதா மகளிர் அணி நிர்வாகி அமுதா உள்ளிட்ட 5 பேரை போலீசார் கைது செய்தனர்.
Next Story

