பூத் கமிட்டி அமைப்பது தொடர்பான வார்டு செயலாளர்கள் ஆலோசனைக் கூட்டம்

பூத் கமிட்டி அமைப்பது தொடர்பான வார்டு செயலாளர்கள் ஆலோசனைக் கூட்டம்
X
திண்டுக்கல் வடக்கு பகுதி பூத் கமிட்டி அமைப்பது தொடர்பான வார்டு செயலாளர்கள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
திண்டுக்கல் மேற்கு மாவட்டம்.மேற்கு மாவட்ட கழகச் செயலாளரும், முன்னாள் அமைச்சருமான, கழக பொருளாளர் திண்டுக்கல் சி. சீனிவாசன் ஆலோசனைக்கிணங்க வடக்கு பகுதி கழக செயலாளர் சுப்ரமணி தலைமையில் பூத் கமிட்டி அமைப்பது, பாசறை நிர்வாகிகள் பூத் கமிட்டியில் பங்கு பெறுவது மேலும் விளையாட்டு அணி அமைப்பது தொடர்பான ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதில் வடக்கு பகுதியைச் சேர்ந்த 12 வார்டு செயலாளர் மற்றும் பாசறை நிர்வாகிகள் கலந்து கொண்டனர். சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட அமைப்புச் செயலாளர் மருதராஜ் கழக நிர்வாகிகளுக்கு பல்வேறு ஆலோசனைகளை வழங்கினார்.இதில் திண்டுக்கல் மாநகராட்சி எதிர்க்கட்சித் தலைவர் சி எஸ் ராஜமோகன், மேற்கு மாவட்ட அம்மா பேரவை செயலாளர் பாரதி முருகன்,இளைஞர் அணி செயலாளர் வி டி ராஜன் கலை பிரிவு செயலாளர் ரவிக்குமார் மதுரை மண்டல தகவல் தொழில்நுட்ப பிரிவு இணைச் செயலாளர் வீரமார்பன் என்ற பிரேம் உள்ளிட்ட கழக நிர்வாகிகள் ஏராளமானோர் இதில் கலந்து கொண்டனர்.
Next Story