மோடி அரசை கண்டித்து திமுகவினர் நூதன ஆர்ப்பாட்டம்
ஏழை எளிய மக்கள் வங்கியில் வாங்கும் நகைக் கடன் அசல் கட்ட முடியாத நிலையில் ஓராண்டு நிறைவுக்கு பிறகு வட்டி மட்டும் கட்டி நகையை மீண்டும் அடமானம் வைக்கும் நடைமுறை இருந்து வந்தது. ஆனால் தற்போது ஒன்றிய அரசு ஓராண்டான நகை கடன்களை முழு தொகை கட்டி வட்டியும் கட்டி தீர்க்க வேண்டும். தேவைப்பட்டால் மீண்டும் அடுத்த நாள் நகைகளை அடமானம் வைக்கலாம் என அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இதனால் ஏழை எளிய மக்கள் பாதிக்கப் படுவார்கள் என கூறி மோடி அரசை கண்டித்தும் இந்த உத்தரவை திரும்ப பெற வலியுறுத்தியும் நாமக்கல் மேற்கு மாவட்ட திமுக வழக்கறிஞர்கள் அணியின் சார்பாகவும், திமுக நெசவாளர் அணியின் சார்பாகவும் திமுக இளைஞர் அணியின் சார்பாகவும் திமுகவினர் திருச்செங்கோடு பாரத ஸ்டேட் வங்கி முன்பு திடீர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். மோடி அரசுக்கு எதிராகவும் மோடி ஒழிக என துண்டு பிரசுரங்கள் ஏந்தியும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இந்த ஆர்ப்பாட்டத்திற்கு நாமக்கல் மேற்கு மாவட்ட திமுக வழக்கறிஞர்கள் அணியின் தலைவர் சுரேஷ்பாபு தலைமை வகித்தார். இந்த ஆர்ப்பாட்டம் குறித்து நாமக்கல் மேற்கு மாவட்ட திமுக வழக்கறிஞர்கள் பிரிவு அணி தலைவர் சுரேஷ்பாபு கூறும் போது ஏழை எளிய மக்கள் நகைக் கடன்களை பெறுவதற்கு வங்கிகளை பெரியளவும் நம்பி இருந்தார்கள். தற்போது முழுமையாக நகை கடனை கட்டி இதற்கான வட்டியையும் கட்டி நகையை எடுத்து அதன் பிறகு ஒரு நாள் கழித்து நகையை மீண்டும் அடமானம் வைக்க வேண்டும் என்றால் அடமானம் வைக்கலாம் என ஒன்றிய அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இதனால் ஏழை எளிய மக்கள் பெரிதும் பாதிக்கப்படுவார்கள் என கூறினார். இந்த ஆர்ப்பாட்டத்தால் திருச்செங்கோடு பாரத ஸ்டேட் வங்கி முன்பு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. மோடி அரசை கண்டித்து துண்டு பிரசுரங்களை பாரத ஸ்டேட் வங்கியின் சுவர்களில் திமுகவினர் ஒட்டினர். வங்கி ஊழியர்கள் வங்கி பலகைகளில் ஒட்ட வேண்டாம் என கேட்டுக் கொண்டார்கள். போராட்டம் குறித்து தகவல் அறிந்து வந்த திருச்செங்கோடு நகர போலீசார் திமுகவினரை கலைந்து செல்ல சொல்லி அறிவுறுத்தினர். இதனை அடுத்து போராட்டம் விலக்கிக் கொள்ளப்பட்டது. பொதுமக்கள் ஏழை எளிய மக்கள் அவசர தேவைக்காக நகை கடன்களை வங்கியில் பெறுவது வாடிக்கை ஆனால் நகை கடன் முழுவதும் கட்டி அதனை பெற்று மீண்டும் அடமானம் வைப்ப வைக்கும் நடைமுறை வேலை எளிய மக்களை வெகுவாக பாதிக்கும் எனவே ஒன்றிய அரசு இதுகுறித்து பரிசீலனை செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் மோடி அரசு ஒழிய வேண்டும் என திமுகவினர் போராட்டத்தில் ஈடுபட்டது திருச்செங்கோடு பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
Next Story



