திண்டிவணத்தில் திமுக பொறியாளர் அணி சார்பில் நேர்காணல்

திண்டிவணத்தில் திமுக பொறியாளர் அணி சார்பில் நேர்காணல்
X
முன்னாள் அமைச்சர் முன்னிலையில் நடைபெற்றது
திண்டிவனத்தில், விழுப்புரம் வடக்கு மாவட்ட தி.மு.க., பொறியாளர் அணிக்கான நேர்காணல் நடந்தது.மாவட்ட அமைப்பாளர் செந்தில்முருகன் வரவேற்றார். தலைவர் சக்தி சரவணன், துணைத் தலைவர் ஏழுமலை முன்னிலை வகித்தனர். விழுப்புரம் வடக்கு மாவட்ட பொறுப்பாளர் மஸ்தான் தலைமை தாங்கி நேர்காணல் முகாமை தொடங்கி வைத்து பேசினார். மாநில பொறியாளர் அணி துணைச் செயலாளர் கட்சி நிர்வாகிகளிடம் நேர்காணலை நடத்தினார். நிகழ்ச்சியில் மாவட்ட பொருளாளர் ரமணன், ஒலக்கூர் ஒன்றிய சேர்மன் சொக்கலிங்கம், திண்டிவனம் நகர செயலாளர் கண்ணன், மயிலம் ஒன்றிய செயலாளர் மணிமாறன், வழக்கறிஞர் அசோகன், பொறியாளர் அணி நிர்வாகிகள் முருகன், ரசூல் பாஷா, வெங்கடேச பெருமாள் உட்பட பலர் பங்கேற்றனர்.
Next Story