கே எஸ் ஆர் மகளிர் கல்லூரியில் ஆண்டு விழா கொண்டாட்டம்

X
கே. எஸ் ஆர் மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் 16 வது ஆண்டு விழா கொண்டாடப்பட்டது. இந்நிகழ்வு கல்வி நிறுவனங்களின் தாளாளர் திரு ஆர் .சீனிவாசன் அவர்கள் முன்னிலையில் திரு கே. எஸ் .சச்சின் அவர்களின் வாழ்த்துகளோடு தொடங்கப்பட்டது. கல்வி நிறுவனங்களின் திட்ட அலுவலர் முனைவர் எஸ்.பாலுசாமி அவர்கள் கலந்து கொண்டார். கல்லூரியின் முதல்வர் முனைவர் மா.கார்த்திகேயன் வரவேற்புரை மற்றும் ஆண்டறிக்கை வாசித்தார். திரு. சக்தி ஹீலர் பவுண்டேஷன் நிறுவனர் மற்றும் தலைமை அதிகாரி அவர்கள் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு, இந்த உலகில் உன்னதமான உறவு உண்டு என்று கூறினால் அது நம்மை பெற்றெடுத்த தாய் தந்தையர் மட்டுமே ஆகையால் அவர்களுக்கு கீழ்ப்படிந்து, அவர்களை நேசித்து, சிறப்பான முறையில் கல்வி கற்று நம் பெற்றோர்களை பெருமைப்படுத்த வேண்டும். சமூக ஊடகங்களின் தாக்கம் அதிகம் உள்ள இந்த உலகில் நம் குறிக்கோளையும், லட்சியத்தையும் நோக்கி பயணம் செய்து சுய முன்னேற்றம் மற்றும் சமுதாய முன்னேற்றம் காண வேண்டும் என்ற கருத்துக்களை எடுத்துரைத்து சிறப்புரையாற்றினார். இந்நிகழ்வில் வகுப்பில் முதலிடம் பெற்ற மாணவிகளுக்கு விருது, ஹேக்கத்தான் ஸ்டார்ட் அப், ஃபூட் கேம்ப், போன்ற போட்டிகளில் சாதனை படைத்த மாணவிகளுக்கு விருது, நூலகத்தை சிறப்பான முறையில் பயன்படுத்திய மாணவிகளுக்கு சிறந்த நூலகர் விருது, என் எஸ் எஸ் விருது, பேண்ட் ட்ரூப் விருது, விளையாட்டு வீராங்கனைகளுக்கு ஜான்சிராணி விருது உள்ளிட்ட 20 க்கும் மேற்பட்ட விருதுகள் வழங்கப்பட்டன. இந்நிகழ்வை சிறப்பிக்கும் வகையில் கலை நிகழ்ச்சிகளும் நடைபெற்றன. கலை நிகழ்ச்சிகளில் முதல் மூன்று இடங்களை பெற்ற மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.
Next Story

