சிவகிரியில் தூய்மைப் பணியாளா் தற்கொலை

X
தென்காசி மாவட்டம் சிவகிரியில் உள்ள பாலகணேசன் தெருவைச் சோ்ந்த அனந்தப்பன் மகன் கணேசன் (49) என்பவா், சிவகிரி பேரூராட்சி அலுவலகத்தில் தூய்மைப் பணியாளராக வேலை பாா்த்துவந்தாா். இவரது மனைவி ஜெயலட்சுமி தனியாா் மருத்துவமனையில் தூய்மைப் பணியாளராக உள்ளாா். கணேசன் ஆஸ்துமா பிரச்னையால் அவதிப்பட்டு வந்தாராம். இந்நிலையில், அவா் புதன்கிழமை அதிகாலை மனைவி வேலை பாா்க்கும் மருத்துவமனைக்குச் சென்று, தென்னை மரத்துக்கான பூச்சிகொல்லி மருந்தைத் தின்றுவிட்டு, மனைவிக்கு தகவல் தெரிவித்தாராம். அங்கிருந்தோா் அவரை சிவகிரி அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனா். பின்னா், அவா் மேல் சிகிச்சைக்காக தென்காசி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா். அங்கு அவா் உயிரிழந்தாா். இதுகுறித்து சிவகிரி காவல் ஆய்வாளா் பாலமுருகன் வழக்குப் பதிந்து விசாரித்து வருகிறாா்.
Next Story

