காவல் நிலையம் முன்பு அரை நிர்வாணமாக படுத்து ரகளையில் ஈடுபட்ட போதை ஆசாமி-

பல்லடம் காவல் நிலையம் முன்பு அரை நிர்வாணமாக படுத்து ரகளையில் ஈடுபட்ட போதை ஆசாமி-பரபரப்பு வீடியோ காட்சிகள்.
திருப்பூர் மாவட்டம் பல்லடம் அறிவொளி நகர் பகுதியில் வசித்து வருபவர் பொன்ராஜ்.இன்று மாலை பல்லடம் காவல்நிலையத்திற்கு மதுபோதையில் வந்த பொன்ராஜ் தன்னுடைய வீட்டை உடைத்து சிலர் ஆக்கிரமிப்பில் ஈடுபட்டதாக கடந்த 10 நாட்களாக புகார் அளித்து வருவதாகவும்,போலீசார் எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை எனவும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் உளவுத்துறையில் பணிபுரிந்து வரும் எஸ்பிசிஐடி போலீசார் ஒருவர் ஒருதலைப்பட்சமாக செயல்படுவதாகவும்,அவரது சாதியை சேர்ந்த நபர்களுக்கு ஆதரவாக செயல்படுவதாக கூறி ரகளையில் ஈடுபட்டார். இதனையடுத்து அவரை காவல்நிலையத்தில் இருந்து போலீசார் வெளியேற்ற முயற்சி செய்த போது போதையில் இருந்த பொன்ராஜ் அரை நிர்வாணமாக காவல் நிலையம் முன்பு படுத்து போராட்டத்தில் ஈடுபட்டார். இதில் நான் கொடுத்த புகாருக்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் சாதி ரீதியாக செயல்படும் போலீசார் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். போதை ஆசாமி அரை நிர்வாணமாக காவல் நிலையம் முன்பு படுத்து போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.
Next Story