போடி அருகே லாரி மோதியதில் ஒருவர் படுகாயம் ஓட்டுநர் கைது

X
போடி அருகே அம்மாபட்டி பகுதியை சேர்ந்தவர் ஈஸ்வரன் (47). இவர் நேற்று (மார்.19) சங்கராபுரம் பேருந்து நிறுத்தம் அருகே நின்று கொண்டிருந்துள்ளார். அப்பொழுது அவ்வழியாக அதிவேகமாக வந்த லாரி ஒன்று ஈஸ்வரன் மீது மோதியது. இதில் அவர் படுகாயம் அடைந்த நிலையில் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். விபத்து குறித்து போடி தாலுகா போலீசார் லாரி ஓட்டுனர் சதீஷ் மீது வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்தனர்.
Next Story

