ராமநாதபுரம் புனித மரியன்னைசூசையப்பர் தேரோட்டம் நடைபெற்றது
ராமநாதபுரம் மாவட்டம், முதுகுளத்தூர் அருகே உள்ள மட்டியரேந்தல் புனித மரியன்னை, சூசைப்பர் தேவலாயத்தில் இரவு சப்பர பவனி நடைபெற்றது. இந்த தேவாலயத்தில் ஆண்டு திருவிழா கடந்த வாரம் கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதற்கு அருள்தந்தை குருஸ் ஜோக்கின் தலைமை வகித்தார். நாள்தோறும் சிறப்புத் திருப்பலி, கூட்டுப் பிரார்த்தனை நடைபெற்றது. இரவு மலர்கள், மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட சப்பரத்தில் புனித மரியன்னை, சூசைப்பர், மிக்கேல் அதிதூதர் ஊர்வலம் நடைபெற்றது. சப்பரம் கிராமத்தின் அனைத்து வீதிகளிலும் உலா வந்தது. அப்போது, மழை பெய்து விவசாயம் செழிக்கவும், உலக நன்மைக்காகவும் மெழுகுவர்த்தி ஏந்தி, கூட்டு பிரார்த்தனையில் ஈடுபட்டனர். தொடர்ந்து அருள்தந்தைகள் சேசுஜெயராஜ், இளங்கோ ஆகியோர் சிறப்பு திருப்பலி நடத்தினர். இந்தத் திருவிழாவில் மட்டியரேந்தல், தாளியரேந்தல் உள்ளிட்ட சுற்று வட்டார கிராம மக்கள், இளைஞர்கள் கலந்து கொண்டனர்.
Next Story



