ராமநாதபுரம் அரசு பள்ளி ஆண்டு விழா நடைபெற்றது
ராமநாதபுரம் மாவட்டம் கமுதி அருகேயுள்ள அபிராமம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி நூற்றாண்டு விழா மாவட்டத் தொடக்கக் கல்வி அலுவலர் சேதுராமு தலைமையில், வட்டாரக் கல்வி அலுவலர் சண்முகம் , இல்லம் தேடிக் கல்வி மாவட்ட ஒருங்கிணைப்பாளர் சி.கிருஷ்ணமூர்த்தி, ஆசிரியர் பயிற்றுநர் நூருல் ஹுதா, அபிராமம் முஸ்லீம் மேல் நிலைப்பள்ளி முதுகலை ஆசிரியர் தனபாலாஜி , அபிராமம் நடுநிலைப்பள்ளியின் முன்னாள் ஆசிரியை முத்துக்கலாவதி ஆகியோர் முன்னிலை வகித்தனர். அபிராமம் நடுநிலைப்பள்ளியின் தலைமையாசிரியை க.வடிவேல் வரவேற்றுப் பேசினார். நூற்றாண்டு விழா தீபத்தை நத்தம் வி.ஏ.ஆர் பள்ளியின் தலைமையாசிரியை தெ.பொன்விழிப்பேச்சி ஏற்றி வைத்தார். நூற்றாண்டுவிழா உறுதிமொழியை முத்தாதிபுரம் தொடக்கப்பள்ளி தலைமையாசிரியை சுரேந்திராதேவி வாசித்தார். மருத்துவர் போதகர் ராஜாங்கம் , வல்லந்தை தொடக்கப்பள்ளி தலைமை ஆசிரியர் முகம்மது அபுபக்கர் ஆகியோர் சிறப்புரையாற்றினர். இதனை தொடர்ந்து மாணவ மாணவியரின் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது. மாணவ, மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது. அபிராமம் நடுநிலைப்பள்ளி ஆசிரியர் சாகுல் ஹமீது நன்றி கூறினார்.
Next Story



