ஜெயங்கொண்டம் போலீசாரை கண்டித்து போலீஸ் நிலையம் முன்பு சாலை மறியலில் ஈடுபட்ட முஸ்லீம் மக்களால் பரபரப்பு. போக்குவரத்து பாதிப்பு.

X
அரியலூர், மார்ச்.20- அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் விருத்தாச்சலம் மெயின் ரோட்டில் உள்ள முஸ்லிம் சுன்னத் ஜமாத்திற்கு சொந்தமான 33 ஏர்ஸ் மயான இடத்தில் மயானம் போக மீதமுள்ள இடத்தை சில தனி நபர்கள் ஆக்கிரமிப்பு செய்ததை மீட்டு தர கோரி முஸ்லிம் மக்கள் ஜமாத் சார்பில் ஜெயங்கொண்டம் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்திருந்தனர். அந்த புகார் மீது நடவடிக்கை எடுக்காத போலீசாரை கண்டித்தும், ஆக்கிரமிப்பு செய்த தனி நபர்கள் மீது நடவடிக்கை எடுத்து இடத்தை மீட்டுத்தர கோரியும் கூறி முஸ்லிம் மக்கள் ஜெயங்கொண்டம் போலீஸ் நிலையம் முன்பு சாலை மறியலில் ஈடுப்பட்டனர். இதுகுறித்து சம்பவம் அறிந்த ஜெயங்கொண்டம் போக்குவரத்து போலீஸ் இன்ஸ்பெக்டர் மதிவானன் தலைமையிலான போலீஸ் சப் இன்ஸ்பெக்டர்கள் பழனி, லோகநாதன் உள்ளிட்ட போலீசார் மறியலில் ஈடுப்பட்ட முஸ்லீம் மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்ததன் பேரில் மறியலை கைவிட்டு கலைந்து போலீஸ் நிலையத்தில் பேச்சு வார்த்தை நடத்தினர். இந்த சம்பவத்தால் சுமார் 1/2 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது குறிப்பிடதக்கது.
Next Story

