பேராவூரணி அருகே வீடு புகுந்து நகை திருடிய அண்ணன் -தம்பி கைது

பேராவூரணி அருகே வீடு புகுந்து நகை திருடிய அண்ணன் -தம்பி கைது
X
நகை திருடிய அண்ணன் -தம்பி கைது
தஞ்சாவூர் மாவட்டம்,  பேராவூரணி அருகே நள்ளிரவில் வீடு புகுந்து நகை திருடிய அண்ணன்- தம்பி இருவரையும் குற்றப்பிரிவு தனிப்படையினர் வாகன சோதனையின் போது கைது செய்தனர். பேராவூரணி அருகே உள்ள அம்மையாண்டி கிராமத்தைச் சேர்ந்தவர் சுமதி, தமிழரசி. இருவரது வீடுகளிலும் கடந்த டிசம்பர் மாதம் நள்ளிரவில் வீடு புகுந்த மர்ம மனிதர்கள்,  தலா 8 பவுன் வீதம் தாலி செயின் உள்ளிட்ட16 பவுன் நகைகளை பறித்து சென்றனர். இது குறித்து திருச்சிற்றம்பலம் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். இந்நிலையில்,  பட்டுக்கோட்டை காவல் துணைக் கண்காணிப்பாளர் ரவிச்சந்திரன் உத்தரவின் பேரில், பட்டுக்கோட்டை உட்கோட்ட குற்றப்பிரிவு தனிப்படை காவல்துறையினர் குற்றவாளிகளை தீவிரமாக தேடி வந்த நிலையில் , ஆவணம் - நெடுவாசல் பிரிவு சாலையில் தனிப்படை காவல்துறையினர் வாகனச் சோதனையில் ஈடுபட்டு இருந்தனர். அப்பொழுது பேருந்தில் இருந்து இறங்கிய இரண்டு இளைஞர்கள் காவல்துறையினரைப் பார்த்ததும் ஓடினர்.  இருவரையும் விரட்டிப்பிடித்த காவல்துறையினர் விசாரணை செய்ததில், இருவரும் புதுக்கோட்டை மாவட்டம், மணமேல்குடி தாலுக்கா, வேதையன்குடி இடையர் தெருவை சேர்ந்த முத்துராமன் ( 25) , காளிதாஸ் (22) இருவரும் அண்ணன், தம்பிகள் என்பதும் தெரியவந்தது.  மேலும்,  அவர்களிடம் நடத்திய தீவிர விசாரணையில், கடந்த டிசம்பர் மாதம் அம்மையாண்டி கிராமத்தில் 16 பவுன் நகைகளை 2 வீடுகளில் புகுந்து திருடியதையும் ஒப்புக்கொண்டனர். மேலும் தஞ்சாவூர், புதுக்கோட்டை, திருவாரூர் உள்ளிட்ட மாவட்டங்களில் அவர்கள் மீது 20 க்கும் மேற்பட்ட திருட்டு வழக்குகள் நிலுவையில் உள்ளதும் தெரியவந்தது. திருச்சிற்றம்பலம் காவல் உதவி ஆய்வாளர் பொன்னியின் செல்வன் மற்றும் காவல்துறையினர் குற்றவாளிகள் இருவரையும் பேராவூரணி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி புதுக்கோட்டை சிறையில் அடைத்தனர்.
Next Story