போலீஸ் நிலையத்தில் கோப்புகள் மாயம் கோர்ட்டில் வழக்கு

X
குமரி மாவட்டம் சிராயன்குழி என்ற பகுதியை சேர்ந்தவர் செல்லைய்யா (74). தொழிலாளி. இவர் குழித்துறை நீதிமன்றத்தில் வழக்கு ஒன்று தொடர்ந்துள்ளார். அந்த மனுவில் கூறப்பட்டுள்ளதாவது:- எனக்கு சொந்தமான 90 சென்ட் நிலத்தை அதே பகுதியை சேர்ந்த ஒருவர் போலி ஆவணம் தயாரித்து மோசடி செய்து விட்டார். இது தொடர்பாக கடந்த 2016 ஆம் ஆண்டு மார்த்தாண்டம் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தேன். ஆனால் போலீசார் வழக்கு பதிவு செய்யவில்லை. இதனால் மாவட்ட எஸ்பி இடம் புகார் அளித்தேன். எஸ்பி உத்தரவின் பேரில் எனது புகார் மீது மார்த்தாண்டம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர். ஆனால் மேல் நடவடிக்கை எதுவும் எடுக்கவில்லை. இதை அடுத்து மதுரை உயர்நீதிமன்ற கிளையில் வழக்கு தொடர்ந்தேன். வழக்கை விசாரித்த நீதிமன்றம் 3 மாதத்தில் இறுதி அறிக்கை தாக்கல் செய்யுமாறு மார்த்தாண்டம் போலீசாருக்கு கடந்த 2018 ஆம் ஆண்டில் உத்தரவிட்டது. இதை அடுத்து கடந்த 19- 6 - 2019 -ல் இறுதி அறிக்கை தயார் செய்யப்பட்டு விட்டதாகவும், ஆனால் வழக்கில் சம்பந்தப்பட்ட கோப்புகளை காணவில்லை எனவும் மார்த்தாண்டம் போலீசார் கூறுகின்றனர். வழக்கில் குற்றம் சுமத்தப்பட்ட நபர் வெளிநாட்டுக்கு தப்பிவிட்டார். இதற்கிடையே போலீசார் கோப்புகளை காணவில்லை எனக் கூறி வழக்கை முடித்து வைக்க நினைப்பதாக சந்தேகம் எழுந்துள்ளது. எனவே இந்த வழக்கில் புலன் விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.
Next Story

