ஆலங்குளம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி ஆண்டு விழா

X
தென்காசி மாவட்டம் ஆலங்குளம் அருகே உள்ள நெட்டூர் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி ஆண்டு விழா நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் வட்டார கல்வி அலுவலர் யசோதா தலைமை தாங்கினார். வட்டார கல்வி அலுவலர் லோகநாதன் முன்னிலை வகித்தார். தலைமை ஆசிரியை கலா ராணி வரவேற்றார். மாணவ மாணவிகளின் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன. மாணவர்களுக்கு பரிசளிக்கப்பட்டன. உதவி ஆசிரியர் ஜெயபாலா நன்றி கூறினார். இந்த நிகழ்ச்சியில் பலர் கலந்து கொண்டனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
Next Story

