பிலிக்கல்பாளையத்தில் துணை மின் நிலையம் அமைக்கப்படுமா எம் எல் எ சேகர் கேள்வி.

X
Paramathi Velur King 24x7 |20 March 2025 7:07 PM ISTபிலிக்கல்பாளையத்தில் துணை மின் நிலையம் அமைக்கப்படுமா? விவசாயத்திற்கு இலவச மின்சாரம் வழங்க அரசு முன்வருமா சட்டமன்றத்தில் எம் எல் எ சேகர் கேள்வி.
பரமத்தி வேலூர், மார்ச். 20: பிலிக்கல்பாளையத்தில் துணை மின் நிலையம் அமைக்கப்படுமா? விவசா யத்திற்கு இலவச மின்சாரம் வழங்க அரசு முன்வருமா? என்று சட்டப்பேரவையில் பரமத்தி வேலூர் தொகுதி எம்எல்ஏ எஸ்.சேகர் கேள்வி எழுப்பினார். தமிழக சட்டப்பேர வையில் பரமத்தி வேலூர் தொகுதி கழக சட்டமன்ற உறுப்பினர் எஸ்.சேகர் பேசியதாவது:- பரமத்தி வேலூர் சட்ட மன்ற தொகுதிக்கு உட்பட்ட கபிலர்மலை ஒன்றியம் பிலிக் கல்பாளையத்தை சுற்றியுள்ளபகுதிகள் காவிரி பாசன பகுதியாக இருக்கின்றன. விவசாய மின்மோட்டார்கள் அதிகமாக உள்ளதாலும், நாட்டு சர்க்கரை ஆலை கொட்டாய்களும் அதிகமாக இருக்கின்றன. பம்பு செட்டுகள் அதிக மாக இருப்பதால் அந்தப்பகுதியில் மின்சார தேவை அதிகமாக இருக்கிறது. இந்தப் பகுதியில் ஒன்பது முதல் 10 கிலோ மீட்டர் தூரத்தில் தான் மின் நிலையம் இருக் கின்றது. கொடுமுடியில் இருந்து காவிரி ஆற்றின் குறுக்கே மின்கம்பம் அமைந்துள்ளன. வெள்ள காலங்களில் மின்கம் பங்கள் சாய்ந்து மின்சாரம் துண்டிக்கப்படுகிறது. எனவே பிலிக்கல்பாளையத்தில் துணை மின் நிலையம் அமைக்க வேண்டும். இந்த பகுதியில் துணை மின் நிலையம் அமைப்பதற்கு இரண்டு இடங்கள் உள்ளன. இந்து அறநிலையத்துறைக்கு சொந்தமான ஒரு இடமும், அரசுக்கு சொந்தமான இட மும் உள்ளது. மேற்கண்ட இரண்டு இடங்களிலும் அரசு பரிந்துரைத்து அந்தப் பகுதி யில் துணை மின் நிலையம் அமைக்க வேண்டும். கபிலர் மலை பாலசுப் பிரமணியர் முருகன் கோவில் தேர்வரும் பாதையில் 690 மீட்டர் அளவுக்கு யூஜி கேபிள்கள் அமைக்க வேண் டும். விவசாயத்திற்கு இலவச மின்சாரம் வழங்க அரசு முன்வருமா? இவ்வாறு பரமத்தி வேலூர் தொகுதி கழக சட்டமன்ற கூ உறுப்பினர் எஸ்.சேகர் பேசினார்.
Next Story
