ஆதித்தமிழர் பேரவையின் மாநில செயற்குழு கூட்டம் மற்றும் அதியமான் பிறந்தநாள் விழா..

ஆதித்தமிழர் பேரவையின் மாநில செயற்குழு கூட்டம் மற்றும் அதியமான் பிறந்தநாள் விழா..
X
ஆதித்தமிழர் பேரவையின் மாநில செயற்குழு கூட்டம் மற்றும் அதியமான் பிறந்தநாள் விழா..
நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் தனியார் திருமண மண்டபத்தில் ஆதித்தமிழர் பேரவையின் மாநில செயற்குழு கூட்டம் மற்றும் அதியமான் பிறந்தநாள் விழா நிகழ்ச்சியானது நடைபெற்றது. நிகழ்ச்சியில் கட்சியின் தலைவர் அதியமான் கலந்து கொண்டு தனது பிறந்தநாளை ஒட்டி கட்சி நிர்வாகிகளுடன் கேக் வெட்டி கொண்டாடினார். அதனைத் தொடர்ந்து பத்திரிக்கையாளர்களை சந்தித்து பேசுகையில் தமிழ்நாட்டை வஞ்சிக்கிற வேலையை செய்து வரும் மோடி அரசை ஆதித்தமிழர் பேரவை வன்மையாக கண்டிக்கிறது. உத்திரப்பிரதேசத்தில் உள்ளவர்கள் எந்த மூன்றாவது மொழியில் கற்றுக் கொள்கிறார்கள் ஆங்கிலம் கூட அவர்கள் படிப்பதில்லை. எந்த ஒரு வட மாநிலம் ஆவது மும்மொழி கொள்கையை நடைமுறைப்படுத்தி இருக்கிறார்களா. காட்டுமிராண்டியைப் போல் அண்ணாமலை நடந்து கொள்கிறார் இதுவரை எந்த அரசியல்வாதியும் இதுபோன்று பேசியது இல்லை. அண்ணாமலை முதலில் டெபாசிட் வாங்கும் வேலையை செய்யட்டும் அதை விட்டு ஏதாவது பேசிக் கொண்டிருப்பதை கேட்க முடியாது. அண்ணாமலையை மக்கள் காமெடியனாக மாற்றி ரொம்ப நாள் ஆகிவிட்டது அவர் பேசிக் கொண்டே இருக்க வேண்டியதுதான் ஒன்றுமே செய்ய முடியாது. ஒரு நாளைக்கு போலீஸ் நாய்க்கு 200 ரூபாய் செலவு செய்கிறது. ஆதிதிராவிட நலத்துறை மாணவனுக்கு குறைவான தொகை வழங்கப்பட்டதை குறித்து தொடர்ந்து அழுத்தம் கொடுத்து உயர்த்த நடவடிக்கை எடுப்பதாக கூறினார். இந்த நிதிநிலை அறிக்கையில் ஆதிதிராவிடர் நலத்துறைக்கு 3000 கோடி ஒதுக்கி இருக்கிறார்கள் இதற்கு முன்பு யாரும் இவ்வாறு ஒதுக்கியது கிடையாது என அதியமான் பேசினார். இந்த கூட்டத்தில் அதியமான் அவர்கள் தலைமை வகித்தார். கோவை ரவிக்குமார் வரவேற்புரை ஆற்றினார். மாவட்ட செயலாளர் மணிமாறன் முன்னிலை வகித்தார். மேலும் நிர்வாகிகள் நீல வேங்கை, சண்முகம், மணிகண்டன், வீரமணி சக்திவேல் முருகேசன் நதியா சின்னப்பிள்ளை பெருமாள் மற்றும் வீரத்திருமகன் நன்றியுரை ஆற்றினார். இதில் கட்சி நிர்வாகிகள், பொதுமக்கள் என பலர் கலந்து கொண்டனர்..
Next Story