தொன்போஸ்கோ அன்பு இல்லத்தில் மகளிர் தின விழா மற்றும் சான்றிதழ் வழங்கும் நிகழ்வு நடைபெற்றது.

X
Rasipuram King 24x7 |20 March 2025 7:15 PM ISTதொன்போஸ்கோ அன்பு இல்லத்தில் மகளிர் தின விழா மற்றும் சான்றிதழ் வழங்கும் நிகழ்வு நடைபெற்றது.
மகளிர் தின விழா: வெண்ணந்தூரில் உள்ள தொன்போஸ்கோ அன்பு இல்லத்தில் இயக்குனர் முனைவர் கஸ்மீர் ராஜ் தலைமையில் மகளிர் தின விழா சிறப்பாக நடைபெற்றது. தேசாய் பவுண்டேசன் டிரஸ்ட் மற்றும் SPS இந்தியா பவுண்டேசன் உடன் இணைந்து தொன்போஸ்கோ அன்பு இல்லம் பல்வேறு சமூக முன்னேற்ற செயல்பாடுகளை செய்து வருகிறது. அதன் ஒரு பகுதியாக மகளிர்க்கு தையல் பயிற்சி, அழகுக் கலைப் பயிற்சி உள்ளிட்ட திறன் வளர்ப்பு பயிற்சிகளை இலவசமாக வழங்கி வருகிறது. அதில் பயனடைந்த 130 க்கும் மேற்பட்ட மகளிர்க்கு நேற்று தேசாய் பவுண்டேசன் டிரஸ்ட் மாநில ஒருங்கிணைப்பாளர் செல்வி. கிருத்திகா முன்னிலையில் சான்றிதழ் வழங்கப்பட்டது.
Next Story
