வெண்ணந்தூர் பகுதியில் மாவட்ட ஆட்சியர் மருத்துவர் திருமதி ச.உமா,ஆய்வு..

X

வெண்ணந்தூர் பகுதியில் மாவட்ட ஆட்சியர் மருத்துவர் திருமதி ச.உமா,ஆய்வு..
வெண்ணந்தூர் டவுன் பஞ்சாயத்தில் தீண்டாமை காரணமாக மேடான கரட்டுப் பகுதிக்குச் சென்ற மின்மயானம்.. தீண்டாமை இல்லாத கிராமத்திற்கான விருது ஆண்டுதோரும் திருச்செங்கோடு யூனியனுக்கு கிடைப்பதாகவும், ஒரு தடவை கூட வெண்ணந்தூர் யூனியனில் இருந்து பரிந்துரை செய்யப்படவில்லை எனவும் ஆட்சியர் வேதனை... நாமக்கல் மாவட்டம் வெண்ணந்தூர் டவுன் பஞ்சாயத்து பெருமாள்கரடு பகுதியில் பொதுமக்கள் குடியிருப்பு பகுதியில் இருந்து ஒரு கிலோ மீட்டர் தூரத்தில் மேடான பகுதியில் மின்மயானம் அமைப்பதற்கான பணி நடந்து வருகிறது. இந்த மின்மயானத்திற்கு செல்லும் பாதை ஆலாம்பட்டி பஞ்சாயத்திற்குள் வருவதாகவும், தண்ணீர் வசதியே இல்லாத நிலையில் மின்மயானம் கட்டுமான பிளானில் பாத்ரூம், டாய்லெட் வசதியும் இல்லை எனவும் கூறப்படுகிறது. இந்த நிலையில், மின்மயானம் அமைப்பதை நேரில் பார்வையிட்ட ஆட்சியர் உமா அடுக்கடுக்கான கேள்விகளை கேட்டார். இதற்கு அதிகாரிகள் பதில் சொல்ல முடியாமல் திணறினர். தொடர்ந்து ஆய்வில் ஈடுபட்ட ஆட்சியர் உமா, உயரத்தில் மின்மயானம் அமைப்பதை இந்த ஊரில் தான் பார்ப்பதாகவும், அதற்கு வெண்ணந்தூர் டவுன் பஞ்சாயத்து பகுதியில் அனைத்து சமூகத்தினரையும் அடக்கம் செய்வதில் பிரச்சனை இருப்பதாகவும், அதன் காரணமாகவே இந்த பகுதியில் அமைக்கப்படுவதாகவும் வெண்ணந்தூர் ஒன்றிய திமுக செயலாளர் R.M.துரைசாமி தெரிவித்தார். அனைத்து சமுதாய மக்களும் ஒரே மயானத்தை பயன்படுத்தும் கிராமத்திற்கு அரசு விருது வழங்குகிறது. ஆண்டுதோறும் தீண்டாமை இல்லாத கிராமத்திற்கான விருதை திருச்செங்கோடு வாங்குவதாகவும், ஒரு தடவை கூட வெண்ணந்தூர் யூனியனில் இருந்து பரிந்துரை செய்யப்படவில்லை என ஆட்சியர் உமா வேதனை தெரிவித்தார். வெண்ணந்தூர் டவுன் பஞ்சாயத்தில் சுமார் 9800 மக்கள் தொகைக்கு 9 மயானம் இருந்தும், தீண்டாமை காரணமாக அனைத்து சமூகத்தினரும் பயன்படுத்தும் வகையிலான மயானம் இல்லாதது குறிப்பிடத்தக்கது.
Next Story