விவசாய பயன்பாட்டிற்காக ராஜா வாய்க்காலுக்கு தண்ணீர் திறப்பு.

விவசாய பயன்பாட்டிற்காக ராஜா வாய்க்காலுக்கு தண்ணீர் திறப்பு.
X
ஜேடர்பாளையம் தடுப்பணையில் விவசாய பயன்பாட்டிற்காக ராஜா வாய்க்காலுக்கு தண்ணீர் திறப்பு.
பரமத்திவேலூர், नं.20- பரமத்தி வேலூர் ராஜா வாய்க்கால், பொய்யேரி, கொமராபாளையம் மற்றும் மோகனூர் வாய்க்கால்கள் பராமரிப்பு பணிகளுக்காக கடந்த மாதம் 22-ந் தேதி வாய்க்கால்களில் தண்ணீர் நிறுத்தப்பட்டது. பராமரிப்பு பணிகள் நிறைவடைந்த நிலையில் நேற்று மீண்டும் வாய்க்கால்களில் தண்ணீர் திறக்கப்பட்டது. ஜேடர்பாளையம் காவிரி ஆற்றின் குறுக்கே கட்டப்ப ட்டுள்ள தடுப்பணை பகுதியில் உள்ள ராஜா - வாய்க்காலில் இருந்து பாசனத்திற்காக பரமத்தி வேலூர், பொய்யேரி,கொமாரபாளையம், மற்றும் - மோகனூர் ஆகிய வாய்க்கா கால்களுக்கும் பாசனத்திற்காக தொடர்ந்து தண்ணீர் திறந்து விடப்பட்டு வருகிறது. வாய்க்கால்களில் வரும் தண்ணீர் மூலம் - விவசாயிகள் நெல்,கரும்பு,வாழை, வெற்றிலை உள்ளிட்ட பல்வேறு பணப்பயிர்களை பயிரிட்டு விவசாயம் செய்து வருகின்ற னர். வாய்க்கால்களில் தூர்வாரும் பணிகள் மற்றும் பராமரிப்பு பணிகளுக்காக ஆண்டுதோறும் 15 நாட்களுக்கு தண்ணீரை நிறுத்தி பணிகள் மேற்கொள்ளப்படுவது வழக்கம். பராமரிப்பு பணிகள் நிறைவடைந்த நிலையில் ஜேடர்பாளையம் படுகை அணையில் உள்ள ராஜா வாய்க்காலில் பரமத்தி வேலூர் நீர் வளத்துறை உதவி பொறியாளர் வினோத்குமார் மற்றும் விவசாய சங்க பிரதிநிதிகள் முன்னிலையில் தண்ணீர் திறந்து விடப்பட்டது. ராஜா வாய்க்கால் உள்ளிட்ட 4 வாய்க்கால்களில் தண்ணீர் திறந்து விடப்பட்டதால் விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.
Next Story