ஆற்காடு:குடிநீர் குளோரின் அளவை ஆய்வு செய்த ஆட்சியர்!

X
ஆற்காடு நகராட்சி 16-வது வார்டுக்குட்பட்ட லட்சுமணன் நகர் பூங்கா பகுதியில் அமைந்துள்ள மேல்நிலை நீர் தேக்க தொட்டியில் இருந்து பொதுமக்களுக்கு விநியோகம் செய்யப்படும் குடிநீரில் போதிய அளவு குளோரின் கலக்கப்பட்டுள்ளதா என்று ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியர் சந்திரகலா இன்று காலை உங்களை தேடி உங்கள் ஊரில் திட்டத்தின் கீழ் ஆய்வு செய்தார். அப்போது துறை சார்ந்த அதிகாரிகள் உடன் இருந்தனர்.
Next Story

