தவறான அறுவை சிகிச்சை செய்த மருத்துவர் மீது புகார் : அவமரியாத செய்த டீன்
திருவள்ளூர் மாவட்ட அரசு மருத்துவமனையில் தவறான அறுவை சிகிச்சை செய்த மருத்துவர் மீது மருத்துவமனை டீன் இடம் புகார் கொடுத்த தினகரன் நாளிதழ் புகைப்படக் கலைஞரை அவமரியாத செய்த டீன். விசாரணைக்கு அழைத்து தகாத வார்த்தைகளால் பேசி, அவதூறாக பேசிய டீன் ரேவதி மீது பத்திரிக்கையாளர்கள் மாவட்ட கலெக்டரிடம் புகார். நடவடிக்கை எடுக்காத பட்சத்தில் ஆர்ப்பாட்டம் மற்றும் சுகாதார துறை அமைச்சரிடம் முறையிடவும் முடிவு. திருவள்ளூர் மாவட்ட தினகரன் நாளிதழ் புகைப்படக் கலைஞராக இருப்பவர் பழனி. இவருக்கு கடந்த 30-ஆம் தேதி வலது ஆள்காட்டி விரலுக்கு மேல்புறம் காயம் ஏற்பட்டது. இதற்காக அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அறுவை சிகிச்சை செய்து கொண்டார். அப்போது கையில் 2 கே ஒயர் ராடு வைத்து தையல் போட்டு அனுப்பி வைத்தனர். இதனைத் தொடர்ந்து வியாழக்கிழமை தோறும் மருத்துவமனைக்கு சென்று கட்டுமாற்றி போட்டு வந்துள்ளார். இந்நிலையில் கடந்த வெள்ளிக்கிழமை கா்லை மருத்துவமனைக்கு கட்டு பிரித்து 2 கே ஒயர் ராடை எடுப்பதற்காக சென்றுள்ளார். அறுவை சிகிச்சை மருத்துவர் பெரிய ஆபரேசன் இருப்பதா கூறி விட்டு சென்றார். காலை முதல் பிற்பகல் 2 மணி வரை காத்திருந்த நிலையில் பயிற்சி மருத்துவர் சேகர் என்பவர் அறுவை சிகி்சசை செய்வதகாக கூறியுள்ளார். அதனைத் தொடர்ந்து வலி தெரியாமல் இருக்க மரத்துப்போகும் ஊசியை செலுத்தியுள்ளார். பிறகு 2 கே ஒயர் ராடை இருக்கும் இடத்தில்ஆபரேசன் செய்யாமல் தையல் போட்ட இடம் அருகே அறுத்துள்ளனர். இதனால் மரத்துப் போன ஊசியையும் தாண்டி, வலி தாங்க முடியாமல் கத்தியுள்ளார் பழனி. இதற்கு வலி மாத்திரை வாங்கி சாப்பிடுங்கள்.. சரியாகிவிடும் என அலட்சியமாக பதில் அளித்துள்ளார். ஆனால் மாத்திரை மருந்தும் தராததால் மருத்துவமனை முதல்வர் ரேவதியிடம் புகார் தெரிவிக்க செல்போனில் தொடர்பு கொண்ட போது, பாதிக்கப்பட்ட பழனி தகவலை சொல்லும் முன்பே, நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்க இருப்பதால் வர முடியாது என்று கூறியுள்ளார். அறுவை சிகிச்சையால் பாதிக்கப்பட்டிருக்கும் நோயாளியை விட நிகழ்ச்சி முக்கியமா மேடம் என கேட்டதற்கு... ஆமாம் எனக்கு அதுதான் முக்கியம் என பேசிக்கொண்டிருக்கும் போதே சொல்லிவிட்டு செல்போனை துண்டித்துள்ளார். இது குறித்து மாவட்ட கலெக்டரிடம் பழனி தெரிவித்த புகாரையடுத்து மருத்துவமனை முதல்வரிடம் மாவட்ட நிர்வாகம் சார்பில் கேட்டதாக தெரிகிறது. இதனால் ஆத்திரமடைந்த மருத்துவமனை முதல்வர் ரேவதி, சனிக்கிழமை காலை விசாரிப்பதற்காக புகைப்படக் கலைஞர் பழனியை அவரது அறைக்கு வரச்சொல்லியுள்ளார். இதையடுத்து அங்கு பழனி சென்ற போது, வெளியில் இருந்த மருத்துவமனை ஊழியர் செல்போனை பிடுங்கிக் கொண்டு உள்ளே அனுப்பியுள்ளார். அப்போது புகைப்படக் கலைஞர் பழனி தகவலை சொல்லும் முன்பே, கலெக்டரிடம் புகார் கொடுத்தால் பயந்துவிடுவோமா... நீ என்ன பெரிய...இதுவா என தகாத வார்த்தைகளால் பேசியுள்ளார். இதற்கு என்ன மேடம் இப்படி ரௌடி மாதிரி பேசுறீங்களே என கேட்டதற்கு , நான் அப்படித்தான் பேசுவேன்.. நான் ரௌடி தான் என்றும் என்ன சொன்னாலும் கேட்காமல் வெளியே போடா என்று அவமரியாதையுடன் திட்டி அனுப்பியுள்ளார். எனவே இது குறித்து தகவல் பத்திரிக்கையாளர்களுக்கு தெரியவந்தது. இதனையடுத்து பத்திரிக்கையாளர்கள் பெரும்பாலானோர் மாவட்ட கலெக்டரை நேரில் சந்தித்து மருத்துவமனை முதல்வர் ரேவதி மீது துரை ரீதியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என புகார் அளித்தனர். ஜனநாயகத்தின் நான்காவது தூணாக இருக்கும் பத்திரிக்கையாளருக்கே இந்த நிலை என்றால் சாதாரணை பாமர மக்களின் நிலை என்னவாக இருக்கும் என கலெக்டரிடம் பத்திரிக்கையாளர்கள் கேள்வி எழுப்பினர். இதனையடுத்து விசாரித்து துறை ரீதியாக நடவடிக்கை எடுக்கப்படும் என கலெக்டர் மு.பிரதாப் உறுதி அளித்தார். நடவடிக்கை எடுக்காத பட்சத்தில் பத்திரிக்கையாளர்கள் சார்பில் மிகப்பெரிய ஆர்ப்பாட்டம் மற்றும் சுகாதார துறை அமைச்சர் மற்றும் தமிழ்நாடு முதல் அமைச்சரிடம் புகார் தெரிவிக்கப்போவதாகவும் பத்திரிக்கையாளர்கள் தெரிவித்துள்ளனர்.
Next Story



