விருதுநகரில் மக்கள் நலக்கூட்டமைப்பு சார்பாக மூன்று அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி விருதுநகர் மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை மனு...*

X
விருதுநகரில் மக்கள் நலக்கூட்டமைப்பு சார்பாக மூன்று அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி விருதுநகர் மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை மனு... விருதுநகர் மக்கள் நல கூட்டமைப்பு சார்பாக மாவட்ட தலைவர் பாஸ்கரன் மற்றும் செயலாளர் R.V. மகேந்திரன் முன்னிலையில் தற்போது நடைமுறையில் உள்ள நந்தா ஹோட்டல் முதல் எம்.ஜி.ஆர். சிலை வரை உள்ள ஒரு வழிப் பாதையை மாற்றி அமைத்து ஏற்கனவே இருந்தபடி இயக்க வேண்டும் , ராஜபாளையம் TO விருதுநகர், ராஜபாளையம் , அருப்புக்கோட்டை செல்லும் பேருந்துகள் புதிய பேருந்து நிலையம் சென்று மீண்டும் பழைய பேருந்து நிலையம் வந்து செல்ல வேண்டும் , நகரின் மத்திய பகுதியில் நூறு ஆண்டுகளுக்கு மேலாக செயல்பட்டு வந்த வந்த பெ.சி. சிதம்பர நாடார் மருத்துவமனையை கிராமத்து மக்கள் நகரத்து மக்கள் கர்ப்பிணிப் பெண்கள் ஆகியோரின் நலன் கருதி ஏற்கனவே இயங்கியபடி அதே இடத்தில் இயக்க வேண்டும் என்ற மூன்று முக்கிய கோரிக்கைகளை வலியுறுத்தி விருதுநகர் மாவட்ட ஆட்சியர் ஜெயசீலனை நேரில் சந்தித்து கோரிக்கை மனுவினை அளித்தனர்
Next Story

