தாசில்தார் ஆய்வு

X

ஆய்வு
உளுந்துார்பேட்டை தாலுகா, பாலி கிராமத்தில், ரேஷன் கடையில் தாசில்தார் அனந்தகிருஷ்ணன் நேற்று ஆய்வு செய்தார். இருப்பு உள்ளிட்ட விவரங்களை ஆய்வு செய்தவர் பொதுமக்களிடம் ரேஷன் பொருள் வினியோகம் குறித்து விசாரித்தார். தொடர்ந்து அங்குள்ள ஆதி திராவிடர் நல மாணவர் விடுதிக்கு சென்றார். அங்கு உணவு சமைக்கும் முறைகளை கேட்டறிந்து பரிசோதித்து, மாணவர்களுடன் தரையில் அமர்ந்து சத்துணவு சாப்பிட்டார். இதனால் மாணவர்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.
Next Story