அச்சரப்பாக்கம் வடக்கு ஒன்றிய திமுக சார்பில் முதலமைச்சர் பிறந்தநாள் விழா.

அச்சரப்பாக்கம் வடக்கு ஒன்றிய திமுக சார்பில் முதலமைச்சர் பிறந்தநாள் விழா.
X
அச்சரப்பாக்கம் வடக்கு ஒன்றிய திமுக சார்பில் முதலமைச்சர் பிறந்தநாள் விழா.
அச்சரப்பாக்கம் வடக்கு ஒன்றிய திமுக சார்பில் முதலமைச்சர் பிறந்தநாள் விழா. செங்கல்பட்டு மாவட்டம் ,அச்சரப்பாக்கம் வடக்கு ஒன்றிய திமுக சார்பில் ஒன்றிய கழக செயலாளர் ஜி.தம்பு தலைமையில் எலப்பாக்கம் கிராமத்தில் முதலமைச்சரின் பிறந்தநாள் விழா மற்றும் இந்தி திணிப்புக்கு எதிரான பொதுக் கூட்டம் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் காஞ்சி தெற்கு மாவட்ட செயலாளரும், எம்.எல்.ஏ.மான க. சுந்தர், தலைமை கழக பேச்சாளர் குடியாத்தம் பெரிய கோடீஸ்வரன், தலைமை செயற்குழு உறுப்பினர் நாராயணன், மாவட்ட இலக்கிய அணி அமைப்பாளர் கலியுக கண்ணதாசன் உள்ளிட்டோர் பங்கேற்று பேசினர். மும்மொழிக் கொள்கையை ஏற்கமாட்டோம் என உறுதிமொழியும் ஏற்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் ஊராட்சி மன்ற தலைவர் ஆதிலட்சுமி கோவிந்தராஜ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
Next Story