பாஜகவின் தெருமுனை பிரச்சாரம் நடைபெற்றது

X
திண்டுக்கல் ரவுண்ட் ரோடு பகுதியில் பாஜக நகரம் சார்பில் நகரத் தலைவர் ராம் கண்ணன் தலைமையில் தெருமுனைப் பிரச்சாரம் நடைபெற்றது. முன்னாள் கிழக்கு மாவட்ட தலைவர் தனபால் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றினார். தேசிய கல்விக் கொள்கையை தமிழகத்தில் கொண்டுவர வேண்டும். மூன்றாவது மொழி கல்வி கொள்கையை தமிழக அரசு ஏற்க வேண்டும். மூன்றாவது மொழி கற்பதினால் ஏற்படும் நன்மைகள் குறித்து தெருமுனைப் பிரச்சாரத்தில் விளக்கம் அளித்தனர். மேலும் தேசிய கல்விக் கொள்கையின் சாரம்சங்களான தாய்மொழி கட்டாயம் ஆங்கிலத்துடன் மூன்றாவது மொழியும் உண்டு. பகுதி பகுதியான தேர்வு முறைகள் வெற்றி பெற பல கட்ட வாய்ப்புகள் டிஜிட்டல் கற்றல் மெய்நிகர் ஆய்வகங்கள் செயற்கை நுண்ணறிவு கோடி இணைய வழி படிப்புகள் ஆகியவற்றின் முக்கியத்துவம் குறித்தும் கூட்டத்தில் பேசினார்கள். நிர்வாகிகள் கணேசன், மணிகண்டன் சிம்ம ராஜா சுரேஷ் உள்ளிட்ட நூற்றுக்கும் மேற்பட்டோர் தெருமுனைப் பிரச்சாரத்தில் கலந்து கொண்டனர்.
Next Story

