கோவை: கோவை - திருப்பதி ரயில் நவீன பெட்டிகளுடன் இயக்கம் !

கோவை: கோவை - திருப்பதி ரயில் நவீன பெட்டிகளுடன் இயக்கம் !
X
ஜெர்மன் தொழில் நுட்பத்துடன் சென்னை ICF-ல் தயாராகி வரும் எல்.எச்.பி எனப்படும் அதிநவீன ரயில் பெட்டிகள் நீண்ட தூர அதிவிரைவு ரயில்களுக்கு பொருத்தப்படுகிறது.
ஜெர்மன் தொழில் நுட்பத்துடன் சென்னை icf ல் தயாராகி வரும் எல்.எச்.பி எனப்படும் அதிநவீன ரயில் பெட்டிகள் நீண்ட தூர அதிவிரைவு ரயில்களுக்கு பொருத்தப்படுகிறது. சாதாரண ரயில் பெட்டிகளை விட இந்தப் பெட்டிகளில் கூடுதலாக பயணிகள் பயணம் செய்யலாம், மற்ற ரயில் பெட்டிகளை விட எடை குறைந்தவை என்பதால் அதிவேகமாக இயக்க சௌகரியமாக இருக்கும். டிஸ்க் பிரேக் சிஸ்டம் இணைக்கப்படுவதால் வேகமாக பயணித்தாலும், சரியான இடத்தில் நிறுத்த முடியும். விபத்தின் போது ஒரு பெட்டி, மற்றொரு பெட்டியுடன் மோதி சேதமடையாது.அதிர்வு இல்லாமல் பாதுகாப்பாகவும், வேகமாகவும் செல்லும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளன. சொகுசு இருக்கைகள், செல்போன் சார்ஜர் வசதி உள்ளிட்ட வசதிகள் இருக்கும். எல்.எச்.பி இரண்டாம் வகுப்பு தூங்கும் வசதி கொண்ட பெட்டியில் 80 இடங்களும், ஏ.சி பெட்டியில் தூங்கும் வசதி கொண்ட 72 இடங்களும் இருக்கும், ஏற்கனவே நீலகிரி எக்ஸ்பிரஸ் ரயிலில் இந்த நவீன பெட்டிகள் பொருத்தப்பட்டு உள்ளன. தற்பொழுது கோவை - திருப்பதி இன்டர்சிட்டி ரயிலில் பொருத்தி நேற்று முதல் இயக்கப்பட்டது. காலை 6:10 மணிக்கு புறப்படும் ரயில் பிற்பகல் 1.25 மணிக்கு திருப்பதியை சென்றடையும், வாரம் தோறும் செவ்வாய், வியாழன் , வெள்ளி ஞாயிறு ஆகிய நான்கு நாட்களில் இந்த ரயில் இயக்கப்படுகிறது. திருப்பதியில் இருந்து ரயில் பிற்பகல் 2.55 மணிக்கு புறப்பட்டு இரவு 10:50 மணிக்கு கோவை வந்தடைகிறது.
Next Story