குட்கா பறிமுதல்

குட்கா பறிமுதல்
X
கோபி அருகே குட்கா பறிமுதல்
ஈரோடு மாவட்டத்தில் குட்கா பொருட்கள் புழக்கத்தை தடுக்கும் வகையில் போலீசார் தீவிர சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். அந்த வகையில், வீரப்பம்பாளையம் போலீசார்,    பொன்னிகவுண்டன் வலசு பகுதியில் உள்ள நெல்லை முத்துக்கனி ஸ்டோர் மளிகை கடையில் நேற்று சோதனை மேற்கொண்டனர். அங்கு அரசால் தடை செய்யப்பட்ட குட்கா பொருட்கள் இருப்பது தெரியவந்தது. இதனையடுத்து, அவற்றை பறிமுதல் செய்த போலீசார், கடை உரிமையாளர் ரவிந்திரவியராஜை(45) கைது செய்தனர். இதேபோன்று, திண்டல் அடுத்த கதிரம்பட்டியில் உள்ள மளிகை கடையில் பெருந்துறை போலீசார் சோதனை மேற்கொண்டதில், குட்கா பொருட்கள் இருப்பது தெரியவந்தது. அவற்றை பறிமுதல் செய்த போலீசார், கடை உரிமையாளர் குமாரை (50) கைது செய்தனர்.
Next Story