கத்தியை காட்டி மிரட்டி பணம் பறிப்பு

X
சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் அருகே வன்னிக்கோட்டை சர்வீஸ் சாலைப் பகுதியில் காளிதாஸ் (40) என்பவர் சென்று கொண்டிருந்தபோது, செல்லப்பனேந்தல் பகுதியைச் சேர்ந்த கார்த்திக் (26) மற்றும் மடப்புரம் பகுதியைச் சேர்ந்த சுபாஷ் சந்திரபோஸ் (24) ஆகிய இருவரும் அவரை கத்தியைக் காட்டி மிரட்டி ரூபாய் 300-ஐ பறித்துச் சென்றனர். இதுகுறித்து காளிதாஸ் அளித்த புகாரின் பேரில் திருப்புவனம் காவல் ஆய்வாளர் சிவகுமார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்.
Next Story

