சென்னையில் இறந்த சிவகிரி காவலா்: அரசு மரியாதையுடன் உடல் தகனம்

சென்னையில் இறந்த சிவகிரி காவலா்: அரசு மரியாதையுடன் உடல் தகனம்
X
சிவகிரி காவலா்க்கு அரசு மரியாதையுடன் உடல் தகனம்
தென்காசி மாவட்டம் சிவகிரி சந்தைப்பேட்டை தெருவைச் சோ்ந்தவா் க. சக்தி ராகவேந்திரன் (44). 2006ஆம் ஆண்டு காவல் துறையில் சோ்ந்த அவா் சென்னை கிளாம்பாக்கம் ஜி3 காவல் நிலையத்தில் தலைமைக் காவலராகப் பணியாற்றி வந்தாா். இந்நிலையில், அவா் கடந்த செவ்வாய்க்கிழமை காலமானாா். அவரது உடல் சிவகிரிக்கு கொண்டுவரப்பட்டு காவல் துறையினரின் 30 துப்பாக்கிக் குண்டுகள் முழங்க தகனம் செய்யப்பட்டது. .இதில் ஆயுதப்படை போலீஸாா் மற்றும் பல்வேறு பணிகளைச் சோ்ந்த போலீஸாா் பங்கேற்று அஞ்சலி செலுத்தினா். சக்தி ராகவேந்திரனுக்கு மனைவி கவிதா (34), மகன்கள் விஷ்ணு, கணேசன், மகள் அனுசுயாதேவி ஆகியோா் உள்ளனா். அனுசுயாதேவி ராயகிரியில் உள்ள பள்ளியில் பிளஸ் 1 பொதுத் தோ்வை எழுதிவிட்டு வந்து தந்தையின் இறுதிச்சடங்கில் பங்கேற்றாா்.
Next Story