ராமநாதபுரம் கார் விபத்து

ராமநாதபுரம் கார் விபத்து
X
ராமேஸ்வரத்தில் சாமி தரிசனம் செய்துவிட்டு திருச்சி நோக்கி சென்ற கார் ஓட்டுநர் தூக்க கலக்கத்தால் கட்டுப்பாட்டை இழந்தது கவிழ்ந்து விபத்து
ராமேஸ்வரம் ராமநாதசுவாமி திருக்கோயிலில் சாமி தரிசனம் செய்துவிட்டு திருச்சி நோக்கி சென்று கொண்டிருந்த காரின் ஓட்டுநர் தூக்க கலக்கத்தால் கார் கட்டுப்பாட்டை இழந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் இருவர் காயமடைந்தனர். விபத்து குறித்து உச்சிப்புளி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். திருச்சியைச் சேர்ந்த நான்கு பேர் குடும்பமாக ராமேஸ்வரம் ராமநாதசாமி திருக்கோவிலுக்கு சாமி செய்வதற்காக நேற்று மாலை காரில் புறப்பட்டு ராமேஸ்வரம் வந்துள்ளனர். ராமேஸ்வரம் வந்தவர்கள் இன்று ராமநாத சுவாமி திருக்கோவிலில் சாமி தரிசனத்தை முடித்துவிட்டு தங்களது சொந்த ஊரான திருச்சி நோக்கி காரில் சென்றனர். கார் உச்சிப்புளி அடுத்த சேர்வைக்காரண்ஊரணி அருகே மதுரை தனுஷ்கோடி தேசிய நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்த போது காரை ஓட்டி வந்த கார் ஓட்டுநர் தூக்க கலக்கத்தில் கார் கட்டுப்பாட்டு இழந்து சாலையின் அருகே தலை குப்புற கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில் காரில் வந்த இரண்டு பெண்களுக்கு காயம் ஏற்பட்டு சிகிச்சைக்காக ராமநாதபுரம் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். மேலும் இருவர் சிறு காயங்களுடன் உச்சப்புளி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த விபத்து குறித்து உச்சிப்புளி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story