சங்கரன்கோவிலில் நாளை நலத்திட்ட உதவிகள் வழங்க திமுக அமைச்சர் வருகை

X
தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் ரயில்வே பீடர் சாலையில் அமைந்துள்ள ஏ.வி.ஆர்.எம் மஹாலில் காலை 10.00 மணி சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத்துறையின் மூலம் சமுதாய வளைகாப்பு விழா மற்றும் தாலிக்குத்தங்கத்தினை வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை அமைச்சர் திரு.கே.கே.எஸ்.எஸ்.ஆர்.இராமச்சந்திரன் அவர்கள் பயனாளிகளுக்கு வழங்க உள்ளார்கள். இந்நிகழ்ச்சியில் தென்காசி மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்கள், தென்காசி நாடாளுமன்ற உறுப்பினர் அவர்கள், சங்கரன்கோவில் சட்டமன்ற உறுப்பினர் அவர்கள்,வாசுதேவநல்லூர் சட்டமன்ற உறுப்பினர் அவர்கள்,தென்காசி சட்டமன்ற உறுப்பினர் அவர்கள், மற்றும் உள்ளாட்சி அமைப்பு பிரதிநிதிகள் ஆகியோர் கலந்து கொள்கின்றனர்.
Next Story

