அரண்மனைப் பகுதியில் கார் நிறுத்தியவருக்கு அடி உதை

X
குமரி மாவட்டம் தக்கலை அருகே உலக புகழ்பெற்ற சுற்றுலாத்தலமான பத்மநாபபுரம் அரண்மனை உள்ளது. இந்த அரண்மனையை பார்ப்பதற்காக தினந்தோறும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வருகின்றனர் அவ்வாறு வரும் பயணிகள் கார், பைக் உள்ளிட்ட வாகனங்களை நிறுத்துவதற்காக கட்டண பார்க்கிங் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. அங்கு ஏசுதாஸ் என்பவர் கட்டண வசூலில் ஈடுபட்டு வருகிறார். இந்த நிலையில் நேற்று கள்ளிக்கோணம் பகுதியை சேர்ந்த டிரைவர் நிஷாத் (37) என்பவர் பத்மநாபபுரம் அரண்மனைக்கு காரில் வந்தார். அங்கு தனது காரை பார்க்கிங் செய்தபோது ஏசுதாஸ் கட்டணத்தை கூறி பணம் கேட்டுள்ளார். ஆனால் நிஷாத் பணம் தர மறுத்ததாக கூறப்படுகிறது. இதனால் இவர்களுடைய வாய் தகராறு ஏற்பட்டு, இதில் ஆத்திரமடைந்த ஏசுதாஸ் நிஷாத்தை சரமாரியாக தாக்கியதாக கூறப்படுகிறது. இது குறித்து நிஷாத் அளித்த புகாரின் பேரில் தக்கலை போலீசார் ஏசுதாஸ் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story

