சுசீந்திரம் அருகே வீடுபுகுந்து பெண் தாக்குதல்

X
நாகர்கோவில் அடுத்த மணிக்கட்டி பொட்டல் பகுதியை சேர்ந்தவர் சுயம்புலிங்கம் மனைவி ராதா (50). இவர்களது மகன் சுபினுக்கும் தம்பத்து கோணத்தை சேர்ந்த ஆஷிகா என்பவருக்கும் கடந்தாண்டு திருமணம் நடந்தது. ஆசிகாவுக்கு கடந்த 12 -3 - 2025 அன்று தனியார் மருத்துவமனையில் பெண் குழந்தை பிறந்தது. குழந்தை பிறந்த 3 நாட்களில் ஆஷிகா மற்றும் குழந்தையை தனது வீட்டிற்கு சுபின் அழைத்து வந்தார். பெற்றோர் வீட்டிற்கு அனுப்பவில்லை. இதனால் கோபத்தில் அதிக மாத்திரைகள் சாப்பிட்ட ஆஷிகாவை மீட்டு மருத்துவமனையில் சேர்த்தனர். இந்த நிலையில் சம்பவத்தன்று ஆஷிகாவின் உறவினர்கள் 2 பேர் சுபின் வீட்டுக்கு வந்து தகராறு செய்து, குழந்தையை தருமாறு கூறியுள்ளனர். அப்போது ஏற்பட்ட தகராறில் சுபினின் தாயார் ராதாவை சரமரியாக தாக்கி ஆடைகளை கிழித்ததாக கூறப்படுகிறது. இதன் படுகாயம் அடைந்த ராதா சுசீந்திரம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். போலீசார் விசாரணை நடத்தி கார்த்திக் (25), ராஜன் (48) மீது வழக்கு பதிவு செய்தனர். இதில் கார்த்திக் கைது செய்யப்பட்டார். ராஜனை போலீசார் தேடி வருகிறார்கள். ராஜன் ஏற்கனவே சுசீந்திரம் காவல் நிலையத்தில் சரித்திர பதிவேடு பட்டியலிலும் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
Next Story

