ராசிபுரத்தில் காசநோய் விழிப்புணர்வு பேரணி

X

ராசிபுரத்தில் காசநோய் விழிப்புணர்வு பேரணி
நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் ரோட்டரி சங்கம், இந்திய மருத்துவ சங்கம், இன்னர் வீல் சங்கம், ராசிபுரம் அரசு தலைமை மருத்துவமனை, ரோட்ராக்ட் அமைப்பு ஆகியவை இணைந்து காசநோய் விழிப்புணர்வு பேரணியை நடத்தியது. முன்னதாக ராசிபுரம் நித்திய சுமங்கலி மாரியம்மன் கோவிலில் தொடங்கியப், பேரணியை ராசிபுரம் ரோட்டரி சங்கத்தின் தலைவர் எம். முருகானந்தன், அரசு மருத்துவமனை தலைமை மருத்துவர் கே.கலைச்செல்வி, மருத்துவர் ஆர். வாசுதேவன், IMA தலைவர் டாக்டர் பி. மாணிக்கம், இன்னர் வீல் தலைவி சுதா மனோகர் ஆகியோர் கொடியசைத்து துவக்கி வைத்தனர். இப்பேரணி காசநோய் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தியவாறு நகரின் முக்கிய வீதி வழியாக சென்றது. நாமக்கல் சாலை, பழைய பேருந்து நிலையம், கவரைத்தெரு, கடைவீதி, ஆத்தூர் சாலை வழியாக புதிய பேருந்து நிலையம் வழியாக மாணிக்கம் மருத்துவமனை முன்பாக இந்த பேரணியை நிறைவடைந்தது. இந்த பேரணியில் ராசிபுரம் ரோட்டரி சங்கத்தின் உறுப்பினர்கள், ராசிபுரம் இந்திய மருத்துவ சங்கத்தின் உறுப்பினர்கள், இராசிபுரம் இன்னர் வீல் சங்கத்தின் உறுப்பினர்கள், இராசிபுரம் அரசு மருத்துவமனை மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள், டாக்டர் ஹனிமன் ஹோமியோபதி மருத்துவக் கல்லூரி , திருவள்ளுவர் அரசுக் கல்லூரி மாணவ மாணவியர்கள், கலந்து கொண்ட னர்.
Next Story